Breaking News
Home / அரசியல் / மூணா பிரிச்சு அதிமுகவை அலறவிட்ட பயங்கர வியூகம்!! தினகரன் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.

மூணா பிரிச்சு அதிமுகவை அலறவிட்ட பயங்கர வியூகம்!! தினகரன் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.

மூணா பிரிச்சு அதிமுகவை அலறவிட்ட பயங்கர வியூகம்!! தினகரன் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச். 

சட்டமன்ற தேர்தலில், சித்தியை நம்பி களமிறங்கி பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 234 தொகுதிகளுக்கும் வேட்பாளரை அறிவித்த மிஸ்டர் கூல் தலைவர் தினகரன், தற்போது எந்த நம்பிக்கையோடு எதிர்கட்சிகளை வீழ்த்தும் முயற்சியில் உள்ளார் என்பது பற்றிய ஒரு அலசல்.

சிறையிலிருந்து வெளிவந்த சசிகலா, அதிரடியாக அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்ததும், அமமுக தலைவர் ஒருகணம் ஸ்தம்பித்து தான் போனார். இதனால் அமமுகவின் முக்கிய நிர்வாகிகள் சிலர் விலகினாலும், அசராமல் நின்றார் தினகரன்.

ஆனால் சித்தியிடம் ஒரு கோரிக்கை மட்டும் வைத்தாராம். பிரச்சாரத்துக்கு வராவிட்டாலும் அட்லீஸ்ட் ஜெயா டிவி வாயிலாவது தேர்தலுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுக்கச் சொல்லுங்கள் என்று வேண்டியுள்ளார். அவரும் ஓ.கே சொல்லவே குஷியில் தினகரன் தனது அரசியல் வேகத்தை தீவிரப்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து வேட்பாளர்களையும் அறிவித்துள்ளார். ஆனால் குறுக்கே புகுந்த அதிமுக, தினகரன் வேட்பாளர் இருவரை தன்வசம் இழுத்துக்கொண்டது. இருப்பினும் அசராத தினகரன் புதுவித யோசனைகளுடன் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டார்.

அதன்படி வடக்கு மாவட்டங்களில் சராசரியாக தொகுதிக்கு 12,000 வாக்குகள் வாங்குவது, தென்மாவட்டங்களில் சில தொகுதிகளை ஜெயிப்பது, மற்ற தொகுதிகளில் இரண்டாமிடத்துக்கு வருவது என பலே திட்டமிட்டுள்ளார்.

மேலும் அமமுக போட்டியிடும் தொகுதிகளை 3 ஆக பிரித்து, ‘ஏ’ பிரிவில் டாப் 10 தொகுதிகளாக கோவில்பட்டி, பாபநாசம், பாப்பிரெட்டிபட்டி, திருப்பரங்குன்றம், முதுகுளத்தூர், குன்னூர், பொள்ளாச்சி, காரைக்குடி, உசிலம்பட்டி, திருவாடானை ஆகியவற்றை பட்டியலிட்டுள்ளார்.

அடுத்ததாக ‘பி’ பிரிவில் 25 தொகுதிகள், ‘சி’ பிரிவில் 125 தொகுதிகள் என மொத்தம் 160 தொகுதிகளில் தீயாய் வேலைகளை முடுக்கிவிட்டிருந்தார்.

மேலும் அமமுக வேட்பாளர்கள் யாரும் கடனாளியாகி விடக்கூடாது என்பதற்காக, டாப் 10 தொகுதிகளுக்கு தலா 5 கோடியும், பி பிரிவு தொகுதிகளுக்கு தலா 3 கோடியும், சி பிரிவு தொகுதிகளுக்கு தலா ஒரு கோடியும் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய தகவல்கள், அவரைக் உற்சாகப்படுத்தியுள்ளன. அதன்படி மேற்கு மண்டலத்திலுள்ள பொறுப்பாளர், ‘பல தொகுதிகளில் நாம் எதிர்பார்ப்பதைவிட அதிகமான வாக்குகள் கிடைக்கும் என கூறியுள்ளார். மேலும் அதிமுக 25 தொகுதிகளை ஜெயிப்பதே கஷ்டம்’ எனவும் கூறியிருக்கிறார்.

தினகரனுக்கு நெருக்கமாக இருந்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் மற்றும் தற்போது பணியில் இருப்பவர்களும் ‘அமமுக ஆதரவில்தான் திமுக ஜெயிக்கப்போகிறது’ என தெரிவித்துள்ளனர். இப்படி பல தரப்பினரிடமும் பேசிய தகவல்களை வைத்து, ‘எப்படியும் 15 தொகுதிகளில் ஜெயிப்போம்’ என்று நம்பிக்கையில் உள்ளாராம் தினகரன்.

2011 தேர்தலில் தேமுதிகவை அதிமுகவுடன் கூட்டணி அமைக்க அம்மா மறுத்தபோதும் சின்னம்மா தீவிரமான முயற்சியால் கூட்டணியில் சேர்த்தார். அந்த நன்றியை பிரேமலதா மறுக்கவில்லை என்பதில் அவருக்கு ஒரு திருப்தி. கோவில்பட்டி, பாபநாசம், பாப்பிரெட்டிபட்டி ஆகிய மூன்று தொகுதிகளில் நிச்சய வெற்றி; திருவாடானை, பொள்ளாச்சி, உசிலம்பட்டி உள்ளிட்ட 15 தொகுதிகளில் இரண்டாவது இடம் வருவோம்; 45 தொகுதிகளில் 25 ஆயிரம் வாக்குகள் வாங்குவோம் என்பதுதான் அவருடைய தற்போதைய நம்பிக்கையாம்.

Dailyhunt

About Admin

Check Also

பொறுப்புள்ள எந்த ஆட்சியாளரும் இந்த ஆபத்தான நேரத்தில் மதுக்கடைகளை திறப்பது அவசியம் எனக் கருதமாட்டார்: ராமதாஸ்

பொறுப்புள்ள எந்த ஆட்சியாளரும் இந்த ஆபத்தான நேரத்தில் மதுக்கடைகளை திறப்பது அவசியம் எனக் கருதமாட்டார்: ராமதாஸ் தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster