Breaking News
Home / உலக செய்திகள் / இந்தியாவில் உச்சத்தில் கொரோனா;உலகில் 2 வது இடத்திற்கு வந்தது

இந்தியாவில் உச்சத்தில் கொரோனா;உலகில் 2 வது இடத்திற்கு வந்தது

இந்தியாவில் உச்சத்தில் கொரோனா;உலகில் 2 வது இடத்திற்கு வந்ததுபுதுடில்லி: இந்தியாவில் ஒரே நாளில் 1,68,912 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியே 35 லட்சத்து 27 ஆயிரத்தை கடந்தது.இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 75 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 21 லட்சத்து 56 ஆயிரத்தை தாண்டியது. 12.01 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,70,179 பேர் உயிரிழந்துள்ளனர்.இதன்மூலம் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 89.86 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.26 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 8.88 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.தடுப்பூசிசோதனைகள்இந்தியாவில் நேற்று (ஏப்.,11) ஒரே நாளில் 11,80,136 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 25 கோடியே 78 லட்சத்து 06 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.உலக பாதிப்புஇன்று (ஏப்ரல் 12-ம் தேதி) காலை 10:15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 13 கோடியே 36 லட்சத்து 98 ஆயிரத்து 363 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 29 லட்சத்து 01 ஆயிரத்து 130 பேர் பலியாகினர். 10 கோடியே 78 லட்சத்து 28 ஆயிரத்து 758 பேர் மீண்டனர்.2வது இடம்உலக அளவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 3 கோடியே 19 லட்சம் பாதிப்புகளுடன் அமெரிக்கா முதலிடத்திலும், ஒரு கோடியே 34 லட்சம் பாதிப்புகளுடன் பிரேசில் 3வது இடத்திலும் உள்ளது.உச்ச நீதிமன்றம்உச்ச நீதிமன்ற ஊழியர்கள் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், உச்ச நீதிமன்ற வளாகம், அறைகள் முழுவதுமே கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல நீதிபதிகளும் இனி முன்புபோல் காணொளியில் விசாரணையை வீட்டிலிருந்தே நடத்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Dailyhunt

About Admin

Check Also

இந்தியாவுக்கு ஆக்சிஜன் ,வெண்டிலேட்டர்கள், ரெம்டிவிசர் வழங்க தயார்: ரஷ்யா அறிவிப்பு

இந்தியாவுக்கு ஆக்சிஜன் ,வெண்டிலேட்டர்கள், ரெம்டிவிசர் வழங்க தயார்: ரஷ்யா அறிவிப்பு இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் மிக அதிக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster