Breaking News
Home / அரசியல் / 10.5 சதவீத உள்ஒதுக்கீடுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

10.5 சதவீத உள்ஒதுக்கீடுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

10.5 சதவீத உள்ஒதுக்கீடுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம்மறுப்பு

 புதுடில்லி: தமிழகத்தில், வன்னியர்களுக்கு, 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி, பிறப்பிக்கப்பட்ட சட்டத்துக்குத் தடை விதிக்க, உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு, தமிழக அரசுக்கு, ‘நோட்டீஸ்’ அனுப்ப உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான, 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு, 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் வகையில், கடந்த பிப்ரவரியில், சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு, கவர்னரும் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்டத்துக்கு தடை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக விளக்கம் கேட்டு, தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இதற்கிடையில், வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடுக்கு தடை விதிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில், அபிஷ் குமார் என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், வினீத் சரண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. வன்னியர் உள்ஒதுக்கீடு சட்டத்துக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

About Admin

Check Also

பொறுப்புள்ள எந்த ஆட்சியாளரும் இந்த ஆபத்தான நேரத்தில் மதுக்கடைகளை திறப்பது அவசியம் எனக் கருதமாட்டார்: ராமதாஸ்

பொறுப்புள்ள எந்த ஆட்சியாளரும் இந்த ஆபத்தான நேரத்தில் மதுக்கடைகளை திறப்பது அவசியம் எனக் கருதமாட்டார்: ராமதாஸ் தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster