Breaking News
Home / அறிவியல் / கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக 3 பெண்களுக்கு ‘ரேபிஸ்’ மருந்து

கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக 3 பெண்களுக்கு ‘ரேபிஸ்’ மருந்து

                                  கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக 3 பெண்களுக்கு ‘ரேபிஸ்’ மருந்து ஷாம்லி: உத்தர பிரதேசத்தின் ஆரம்ப சுகாதார நிலையத்தில், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள சென்ற மூன்று பெண்களுக்கு, தவறுதலாக வெறிநாய் கடிக்கான, ‘ரேபிஸ்’ தடுப்பூசி செலுத்தப்பட்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இங்கு ஷாம்லி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள, அதே பகுதியைச் சேர்ந்த சரோஜ், 70, அனார்கலி, 72, மற்றும் சத்யவதி, 60, ஆகியோர், நேற்று முன்தினம் சென்றனர். அவர்கள் மூவருக்கும், கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக, வெறிநாய் கடிக்கான, ‘ரேபிஸ்’ தடுப்பூசி செலுத்தப்பட்டது.இதுகுறித்து, மாவட்ட கலெக்டர் ஜஸ்ஜித் கவுர் கூறியதாவது:சுகாதார மையத்தின் முதல் தளத்தில், கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இவர்கள் மூவரும் அங்கு செல்லாமல், மற்றொரு பிரிவுக்குச் சென்றுள்னர். அங்கிருந்த மருந்தாளுனர், அவசர வேலையாக வெளியே புறப்பட்டுள்ளார். அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும்படி, மற்றொரு நபரிடம் கூறியுள்ளார். அந்த நபர் தவறுதலாக, ரேபிஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளார்.தவறுக்கு காரணமான மருந்தாளுனரை, ‘சஸ்பெண்ட்’ செய்யும்படி, தலைமை சுகாதார அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

முறைகேடு குறித்து, விரிவான விசாரணை நடக்கிறது. அதுதொடர்பான அறிக்கை கிடைத்ததும், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.அனார்கலி கூறுகையில், ”தடுப்பூசி செலுத்த ஆதார் அட்டை கேட்கவில்லை என்றதும், எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. ரேபிஸ் தடுப்பூசியால், வீட்டிற்கு வந்ததும் மயங்கி விழுந்தேன்,” என்றார்.

About Admin

Check Also

அதிக கட்டணம் பெறுவது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது – ஐகோர்ட் கிளை

அதிக கட்டணம் பெறுவது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது – ஐகோர்ட் கிளை கொரோனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் பெறுவது மிகப்பெரிய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster