Breaking News
Home / செய்திகள் / சென்னை ‘உஷ்ஷ்ஷ்!’ : இப்படி இருந்தால் கட்சி எப்படி வளரும்?

சென்னை ‘உஷ்ஷ்ஷ்!’ : இப்படி இருந்தால் கட்சி எப்படி வளரும்?

கட்சி எப்படி வளரும்?

அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், நேற்று முன்தினம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், உட்கட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்கப் படும் என, தகவல் வெளியானது. ஆனால், நீண்ட நேரம் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதிலே நேரம் கடந்துள்ளது.

உட்கட்சி தேர்தல் விவாதத்தின்போது, பன்னீர்செல்வம் ஆதரவாளரான கட்சி அமைப்பு செயலர் ஜே.சி.டி.பிரபாகர், கட்சி விதிகளை எடுத்துரைத்து, அதன்படி தேர்தல் நடத்த வேண்டும் எனக் கூறி உள்ளார். இதற்கு இ.பி.எஸ்., ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கூட்டம் முடிந்த பின், ஜே.சி.டி., பிரபாகரிடம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, ‘உன்னால்தான் கட்சியில் அதிகம் பிரச்னை ஏற்படுகிறது’ எனக் கூறி கண்டித்துள்ளார். இது பன்னீர்செல்வம் தரப்பினரிடம், அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கூட்டத்தில், பன்னீர்செல்வம் – பழனிசாமி ஆகியோர் இடையே நேரடி வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதை கண்ட கட்சி நிர்வாகிகள், இப்படி இருந்தால், கட்சி எப்படி வளரும் என மனம் வெதும்புகின்றனர்.

பாலியல் ஆசிரியரை பாராட்டிய அமைச்சர்!

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கத்தில் ஆங்கிலோ இந்தியன் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவர், 2017ல், விடுதி மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட மாணவியர் புகார் அளித்தும், பள்ளி முதல்வர் போலீசிற்கு தகவல் தெரிவிக்காமல் மூடி மறைத்துள்ளார். கண்துடைப்புக்காக உற்கல்வி ஆசிரியரை, ௧5 நாட்கள் ‘சஸ்பெண்ட்’ செய்து, நடவடிக்கை எடுத்ததாக கணக்கு காட்டியுளார். இந்த பாலியல் தொல்லை விவகாரம் தொடர்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு கமிஷன், பள்ளி முதல்வர், உடற்கல்வி ஆசிரியர் உள்ளிட்டோருக்கு ‘சம்மன்’ அனுப்பி உள்ளது.

இந்நிலையில், பள்ளி விழாவுக்கு சென்ற பள்ளி கல்வித்துறை அமைச்சர், பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியவருக்கு நினைவு பரிசு வழங்கி, பாராட்டிய படங்கள் சமூக வலை தளங்களில் வெளியாகி உள்ளன. இந்த படத்தின் வாயிலாக, ‘பள்ளி நிர்வாகம் என் பக்கம் தான் உள்ளது; நான் அமைச்சருக்கு நெருக்கமானவர்’ என்பது போல உடற்கல்வி ஆசிரியர் காட்டி, தன் மீதான பாலியல் குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்க முயற்சி செய்து வருவதாகதகவல் உள்ளது.

அரசியல் நடிகை ‘அப்செட்’

சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா, அ.தி.மு.க.,வில் இணைய பகீரத பிரயத்தனம் செய்து வருகிறார். அவர் சிறையில் இருந்தபோது, அ.தி.மு.க.,வை மீட்பதற்கு எனக்கூறி, அ.ம.மு.க.,வை தினகரன் துவக்கினார். தற்போது, தினகரனுக்கும் சசிகலாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

latest tamil news

கடந்த சில தினங்களாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சசிகலா நேரடியாக சென்று, மக்களை சந்தித்து வருகிறார். அவ்வாறு செல்லும்போது, கட்சியினர் செல்ல வேண்டாம் என, தினகரன் தரப்பில் தெரிவித்துள்ளனர். ஆனால், அக்கட்சி மகளிர் அணி செயலரான கல்வி கடவுள் பெயர் கொண்ட சீனியர் நடிகை, சசிகலா உடன் சென்றுள்ளார். இதையறிந்த, தினகரன் உதவியாளர், அவரை மொபைலில் தொடர்பு கொண்டு கண்டித்துள்ளார். அந்த நடிகை ‘அப்செட்’ ஆகி சசிகலாவிடம் சென்று புலம்பியுள்ளார்.

 

About Admin

Check Also

இது உங்கள் இடம்: முதல்வரின் இன்னொரு முகம்!

பா.விஜய், காட்டிகன், சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: ‘தமிழகத்தின் சுவிட்சர்லாந்து’ என்று அழைக்கப்படும் நீலகிரியில், விதிமீறல் …

Leave a Reply

Your email address will not be published.

MyHoster