Breaking News
Home / தமிழகம் / கோவை / கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் என்று எதிர்பார்த்தோம்.10 ஆண்டுகளில் கோவைக்கு தேவையான திட்டங்களை நாங்கள் செய்து உள்ளோம்.

latest tamil news

.மின்சாரத்துறை அமைச்சர் பல்வேறு பகுதிகளில் மக்கள் சபை நடத்தி பொதுமக்களிடம் மனு வாங்கியது ஆரோக்கியமான செயல்.கோவையில் 300க்கும் மேற்பட்ட ஒப்பந்த சாலைகளை திமுக ஆட்சியில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மாநகராட்சி தேர்தலில் ஏதாவது ஒரு வழக்குப் போட்டு கைது செய்ய வேண்டும் என உத்தரவு போடப்பட்டுள்ளதாக எனக்கு தகவல் வந்துள்ளது.அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப் போடுகிறார்கள்.என் மேல் அதிகமான வழக்குகள் போடப்பட்டு உள்ளது.கோவைக்கு பல்வேறு திட்டங்களை நாங்கள் கொடுத்துள்ளோம்.

latest tamil news

எப்படியாவது அரசியலை விட்டு விலக வேண்டும் என்ற எண்ணத்தோடு திமுக செயல் படுகிறது.நீதியரசரை கடவுளாக நம்புகிறோம்..நோய்தொற்று காலத்தில் மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செய்துள்ளோம்.

300 சாலைகளை போடுவதற்கு உத்தரவிடுங்கள்.என்மேல் எத்தனை வழக்குகள் போட்டாலும் நாங்கள் சந்திக்கத் தயார்.கட்சித் தொண்டர்கள் உண்மையாக உள்ளார்கள்.தொடர்ந்து காவல்துறை எங்களை மிரட்டுகிறது.

கோவை மாவட்டத்தை நீங்கள் புறக்கணிக்காதீர்கள் . உத்திரவு போடாவிட்டால் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவோம். இவ்வாறு வேலுமணி கூறினார்.

 

About Admin

Check Also

இது உங்கள் இடம்: முதல்வரின் இன்னொரு முகம்!

பா.விஜய், காட்டிகன், சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: ‘தமிழகத்தின் சுவிட்சர்லாந்து’ என்று அழைக்கப்படும் நீலகிரியில், விதிமீறல் …

Leave a Reply

Your email address will not be published.

MyHoster