Breaking News
Home / இந்தியா / டிச.,15ல் சர்வதேச விமான போக்குவரத்து துவக்கம்: மத்திய அரசு

டிச.,15ல் சர்வதேச விமான போக்குவரத்து துவக்கம்: மத்திய அரசு

புதுடில்லி : கோவிட் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சர்வதேச விமான போக்குவரத்து வரும் டிச.,15 முதல் துவங்கும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கோவிட் பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 23ல் சர்வதேச விமானபோக்குவரத்திற்கு மத்திய அரசு தடை விதித்தது. இருப்பினும், வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்காக பல கட்டுப்பாடுகளுடன் 28 நாடுகளுக்கு மட்டும் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன.

latest tamil news

இந்நிலையில், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
வணிக ரீதியிலான சர்வதேச விமான போக்குவரத்தை , இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கும் துவக்குவது குறித்து, மத்திய உள்துறை, வெளியுறவுத்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகங்களுடன் ஆலோசனை நட்தப்பட்டது. இதில் எடுத்த முடிவுகளின்படி, வரும் டிச.,15 முதல் சர்வதேச விமான போக்குவரத்தை துவக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

About Admin

Check Also

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 1650 புள்ளிகள் சரிவு

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று(நவ., 26) கடும் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் 1650 புள்ளிகள் வீழ்ச்சி கண்டன. புதிதாக …

Leave a Reply

Your email address will not be published.

MyHoster