Breaking News
Home / கொரோனா / தமிழகத்தில் கோவிட் பாதிப்பு 744ஆக சற்று அதிகரித்துள்ளது: 782பேர் நலம்

தமிழகத்தில் கோவிட் பாதிப்பு 744ஆக சற்று அதிகரித்துள்ளது: 782பேர் நலம்

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 741 -ல் இருந்து 744 ஆக சற்று அதிகரித்துள்ளது. 14 பேர் உயிரிழந்து உள்ளனர். 782 பேர் குணமடைந்து உள்ளனர்.

 

latest tamil news

 

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1,01,624 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 744 பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதியாகி உள்ளது.இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 27,22,506ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 5,36,62,064 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கோவிட் உறுதியானவர்களில் 438 பேர் ஆண்கள், 306 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 15,89,007 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 11,33,461 ஆகவும் அதிகரித்து உள்ளது. 782பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,77,607 ஆக உயர்ந்துள்ளது.

14 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதில் தனியார் மருத்துவ மனையில் 5 பேரும்,அரசு மருத்துவமனையில் 9 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,415 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

 

 

சென்னை

சென்னையை பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 114ஆக இருந்த நிலையில் இன்று (நவ.24 ம் தேதி)115ஆக அதிகரித்துள்ளது.

 

மாவட்ட வாரியாக விபரம்

 

latest tamil news
latest tamil news

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published.

MyHoster