Breaking News
Home / உலக செய்திகள் / கிரிப்டோகரன்சி தடை செய்யப்படாது ஒழுங்குப்படுத்தப்படும்: அத்துறையினர் தகவல்

கிரிப்டோகரன்சி தடை செய்யப்படாது ஒழுங்குப்படுத்தப்படும்: அத்துறையினர் தகவல்

புது டில்லி: வங்கிகளின்றி பரிமாற்றம் செய்யப்படும் கிரிப்டோகரன்சி எனும் டிஜிட்டல் பணத்திற்கு மத்திய அரசு தடை விதிக்கும் மசோதாவை கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அம்மசோதா கிரிப்டோகரன்சிகளை ஒழுங்குபடுத்துவதற்கு தான், தடை செய்வதற்கு அல்ல என்று அத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

 

latest tamil news

 

கடந்த சில ஆண்டுகளில் கிரிப்டோகரன்சி உலகம் முழுவதும் மிகவும் பிரபலமடைந்து உள்ளது. இதில் முதலீடு செய்தவர்கள் கணிசமான லாபத்தை ருசிக்கவே, அதைக் கண்டு பலரும் கிரிப்டோகரன்சிகளில் பணத்தை கொட்டத் தொடங்கினர். அலைபேசி செயலிகள் வருகையால் இந்த கிரிப்டோகரன்சிகளை வாங்குவது அனைவருக்கும் சாத்தியமானது. பங்குச்சந்தை, டாலர் மதிப்பு போன்று கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு தினசரி ஏற்ற இறங்கங்களை சந்திக்கும். மத்திய அரசு கிரிப்டோகரன்சிக்கு தடை போடப்போகிறது என்ற தகவல் வெளியானதால் அவை சரிவை சந்தித்திருக்கின்றன.

 

latest tamil news

 

இந்தியாவில் கிரிப்டோகரன்சிகளுக்கு ஆர்.பி.ஐ., விதித்திருந்த தடையை 2020-ல் உச்ச நீதிமன்றம் விலக்கியது. பிளாக்செயின் மற்றும் கிரிப்டோ சொத்துக் கவுன்சில் தகவல் படி இந்தியர்கள் சுமார் 6 லட்சம் கோடி கிரிப்டோ சொத்துக்களை வைத்துள்ளனர். இந்நிலையில் நிதித் துறை அதிகாரிகள் மத்திய அரசு கொண்டு வர உள்ள மசோதா கிரிப்டோகரன்சிகளை ஒழுங்குப்படுத்தவே செய்யும். முழுக்க தடை போடாது என கூறுகின்றனர். கிரிப்டோ பங்குதாரர்களே அதில் ஊழல் நடக்காமல் கண்காணிக்க ஒழுங்குமுறையை கோரியதாக தெரிவிக்கின்றனர் 

About Admin

Check Also

சாலையில் பறந்த பணம்; அள்ளிச் சென்ற மக்கள்: வைரல் வீடியோ

கலிபோர்னியா: அமெரிக்காவில், டிரக் மூலம் கொண்டு செல்லப்பட்ட வங்கி பணம், டிரக் கதவு திறந்ததால் சாலையில் பறந்து செல்ல, அதனை …

Leave a Reply

Your email address will not be published.

MyHoster