Breaking News
Home / தமிழகம் / கோவை / அரசியல் பேசாமல் ‘அரசியல்’ பேச வைத்த முதல்வர் ஸ்டாலின்!

அரசியல் பேசாமல் ‘அரசியல்’ பேச வைத்த முதல்வர் ஸ்டாலின்!

கோவை : கோவை வந்திருந்த, தி.மு.க., தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின், அரசு விழா என்பதால், அரசியல் பேசாமல், மற்றவர்களை ‘அரசியல்’ பேச வைத்து, சென்னை திரும்பிச் சென்றிருக்கிறார்.

கோவையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் பேசும்போது,”கடந்த சட்டசபை தேர்தலில் நாம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெற முடியவில்லை. இதைப்பற்றி விரிவாக பேசி, அரசியலாக்க தயாராக இல்லை. இது, அரசு விழா,” என, பேச்சைத் துவங்கினார்.மேலும், அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், தொலைபேசி அழைப்பை ஏற்று, விழாவுக்கு வந்திருந்தார். அவருக்கு மேடையில் இருக்கை வழங்கி, முக்கியத்துவம் அளித்தார் ஸ்டாலின்.

latest tamil news

வானதி பேசும்போது, ‘மாறுபட்ட சித்தாந்தம் இருந்தாலும், ஒருமித்த குரலுடன் செயல்பட்டால், மக்களுக்கு நலத்திட்டங்களை விரைந்து செயல் படுத்தலாம்’ என்றார்.இது, தி.மு.க.,வுக்கும், பா.ஜ.,வுக்கும் இடையே நெருக்கத்தை ஏற்படுத்துகிறதோ என்ற யோசிக்க வைத்திருக்கிறது.எதிர்க்கட்சியை சேர்ந்த அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்களுக்கு இருக்கை போடப்பட்டு, கட்சி பாகுபாடின்றி, அரசு செயல் படுவதுபோல் காட்டப்பட்டுள்ளது.அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் வந்திருந்தாலும், முதல்வரின் நேரடி பார்வையில் கீழே அமர்ந்திருக்கும் வகையில் இருக்கை வசதி செய்யப்பட்டிருந்தது. இது, எதிர்க்கட்சியினருக்கு ‘செக்’ வைத்திருப்பதாக, தி.மு.க.,வினர் சிலாகித்து கூறுகின்றனர்.

கட்சியை வளர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பதால், முதல்வர் வருகையை பெருவிழாவாக நடத்தி, மாவட்டத்தின் மூலை முடுக்கில் இருந்து தொண்டர்களை வரவழைத்து, சிறப்பான வரவேற்பு கொடுத்து, மாவட்டமே பேசும் நிகழ்வாக மாற்றியிருக்கின்றனர்.இது, தி.மு.க., மற்றும் நிர்வாகிகளிடம் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. விமான நிலையம் முதல் மைதானம் வரை, 10 பகுதியாக பிரித்து, 10 தொகுதிகளுக்கும் ஒதுக்கப்பட்டது. அந்தந்த தொகுதியை சேர்ந்தவர்கள் திரண்டு நின்று வரவேற்றனர்.எந்தெந்த மாவட்ட பொறுப்பாளர்கள் சுணக்கமாக செயல்பட்டிருக்கின்றனர் என்பதை கண்டறிய, இத்தகைய ஏற்பாட்டை செய்திருந்தனர்.

மேடையில் தி.மு.க., – எம்.பி.,க்கள் இருந்தபோதிலும், கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூ., எம்.பி., நடராஜனுக்கும் பேச வாய்ப்பளித்து, கவுரவப்படுத்தியிருக்கின்றனர். அரசு விழாவில் அரசியல் பேசக்கூடாது என்கிற கட்டுப்பாட்டை கடைபிடித்த போதிலும், நிகழ்வுகள் மூலம் அரசியல் விஷயங்களை நாசூக்காக பதிவு செய்து, மற்றவர்களை பேச வைத்து, சென்னை திரும்பிச் சென்றிருக்கிறார் ஸ்டாலின்.

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published.

MyHoster