Breaking News
Home / இந்தியா / ‘சென்ட்ரல் விஸ்டா’ கட்டுமானம் எச்சரிக்கையுடன் புது மனு தள்ளுபடி

‘சென்ட்ரல் விஸ்டா’ கட்டுமானம் எச்சரிக்கையுடன் புது மனு தள்ளுபடி

புதுடில்லி :’சென்ட்ரல் விஸ்டா’ எனப்படும் டில்லியில் அமைந்து வரும் புதிய பார்லிமென்ட் வளாகம் தொடர்பான புதிய வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், மனுதாரர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
டில்லியில் ஜனாதிபதி மாளிகை முதல் இந்தியா கேட் வரையிலான ராஜபாதையில், புதிய பார்லிமென்ட் வளாகம் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இதை எதிர்த்து தொடரப் பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்தது.

 

latest tamil news

 

இந்நிலையில் புதிய வளாகத்தில், துணை ஜனாதிபதியின் இல்லம் அமைய உள்ள பகுதிக்கான நிலத்தின் வகையை மாற்றியமைத்துள்ளதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 

இதை விசாரித்த நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், தினேஷ் மகேஷ்வரி, சி.டி.ரவிக்குமார் அமர்வு கூறியுள்ளதாவது:பொழுதுபோக்கு இடத்துக்கான வகைப்பாட்டில் இருந்து குடியிருப்பு வகைப்பாட்டுக்கு இந்த நிலம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.புதிய பார்லிமென்ட் வளாக கட்டுமான பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு நன்கு திட்டமிட்டு, அதன்படி தான் செயல்படுத்தி வருகிறது.

அனைத்து விஷயங்களையும் விமர்சிக்க முடியும். ஆனால், அது ஆக்கப்பூர்வமான விமர்சனமாக இருக்க வேண்டும். இந்த நில வகைப்பாடு மாற்றியதால், பொது நலனுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது போன்று இனிமேல் எவரும் வழக்கு தொடரக் கூடாது. அதனால், இந்த மனு முழுமையாக நிராகரிக்கப்படுகிறது.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.

About Admin

Check Also

இந்தியாவில் புதுவகை உருமாறிய கொரோனா பாதிப்பில்லை: மத்திய அரசு

புதுடில்லி: தென்ஆப்ரிக்காவில் பி.1.1.529 என்ற புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், இந்தியாவில் இதுவரை இந்த புதுவகை கொரோனா தொற்று …

Leave a Reply

Your email address will not be published.

MyHoster