Breaking News
Home / இந்தியா / நவ., 26 முதல் அலைபேசி கட்டணங்கள் 25% வரை உயர்கிறது!

நவ., 26 முதல் அலைபேசி கட்டணங்கள் 25% வரை உயர்கிறது!

புது டில்லி: அலைபேசி சேவை வழங்கும் ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் தங்கள் கட்டணங்களை 25 சதவீதம் வரை உயர்த்தியுள்ளன. நவ., 26 முதல் புதிய கட்டணங்கள் அமலுக்கு வரும். இதன் மூலம் ஒரு மாதத்திற்கு ரூ.50 கூடுதலாக செலவழிக்க வேண்டி இருக்கும்.

latest tamil news

தற்போது 28 நாட்களுக்கு தினசரி ஒரு ஜி.பி., டேட்டா மற்றும் வரம்பின்றி அழைப்புகளை மேற்கொள்ள ரூ.219 வசூலிக்கப்படுகிறது. அதுவே தினசரி 1.5 ஜி.பி., என்றால் ரூ.249-ம், 2 ஜி.பி., என்றால் ரூ.298-ம் கட்டணமாக இருக்கின்றன.

இந்நிலையில் இக்கட்டணங்கள் அனைத்தும் நவ., 26 முதல் முறையே ரூ.265, ரூ.299 மற்றும் ரூ.359 ஆக உயர்த்தப்படுகிறது.
ஏர்டெல் நிறுவனம் கட்டண உயர்வை நேற்று (நவ., 22) அறிவித்த நிலையில், ரூ.7 ஆயிரம் கோடி கடனில் தத்தளிக்கும் வோடோபோனும் அதை அப்படியே பின்பற்றி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜியோவும் வரும் நாட்களில் கட்டணத்தை அதிகரிக்கக் கூடும்.

latest tamil news

கட்டண உயர்வு தொடர்பாக நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: அலைபேசி சேவையை பொறுத்தவரை ஒரு பயனர் மூலமான சராசரி வருவாய் ரூ.300 ஆக இருக்க வேண்டும்.
அப்போது தான் நிதிநிலை ஆரோக்கியமானதாக இருக்கும். நெட்வொர்க்குகள் மற்றும் அலைக் கற்றைகளுக்கு தேவைப்படும் முதலீடுகளுக்கு இந்த அளவிலான வருவாய் தேவை. மேலும் இந்தியாவில் 5ஜி சேவையை கொண்டு வர இடமளிக்கும். எனவே தான் இக்கட்டண உயர்வு என கூறியுள்ளனர்.

 

About Admin

Check Also

இந்தியாவில் புதுவகை உருமாறிய கொரோனா பாதிப்பில்லை: மத்திய அரசு

புதுடில்லி: தென்ஆப்ரிக்காவில் பி.1.1.529 என்ற புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், இந்தியாவில் இதுவரை இந்த புதுவகை கொரோனா தொற்று …

Leave a Reply

Your email address will not be published.

MyHoster