Breaking News
Home / இந்தியா / பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு: இந்தியா, சீனா முடிவு

பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு: இந்தியா, சீனா முடிவு

புதுடில்லி: கிழக்கு லடாக்கில் எஞ்சிய பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காண்பது என இந்தியா மற்றும் சீனா முடிவு செய்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய சீன எல்லை விவகார ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்பு குழுவின் 23வது குழு கூட்டம் இன்று(நவ.,18) நடந்தது. இந்தியா சார்பில், வெளியுறவு அமைச்சகத்தில், கிழக்கு ஆசியாவிற்கான கூடுதல் செயலர் தலைமையிலான குழுவினரும், சீனா சார்பில், அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்திற்கான எல்லைத்துறை இயக்குநர் ஜெனரல் தலைமையிலான குழுவினரும் பங்கேற்றனர்.

இந்த கூட்டம் தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய சீனா எல்லையில், மேற்கு பிராந்தியத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நிலவும் சூழ்நிலை குறித்து விரிவாக ஆலோசனை நடந்தது. கடந்த அக்.,16ம் தேதி இரு நாட்டு கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு பிறகு ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்தும் ஆராயப்பட்டது.

இதன் அடிப்படையில், கிழக்கு லடாக்கில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் நிலவும் எஞ்சிய பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காண்பது என இரு தரப்பும் ஒப்பு கொள்ளப்பட்டன. இது இரு தரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் நடைமுறைகள் படி அமையும். இதன் மூலம் அங்கு அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவில் ஏற்படுத்த முடியும்.

latest tamil news

எல்லைப்பகுதிகளில் நிலையான சூழல் நிலவ செய்வதுடன், எந்தவித அசாம்பாவித சம்பவங்களை தவிர்க்க வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதுடன், அடுத்த சுற்று பிரச்னை தொடர்பாக விரைவாக பேச்சுவார்த்தை நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

About Admin

Check Also

இந்தியாவில் புதுவகை உருமாறிய கொரோனா பாதிப்பில்லை: மத்திய அரசு

புதுடில்லி: தென்ஆப்ரிக்காவில் பி.1.1.529 என்ற புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், இந்தியாவில் இதுவரை இந்த புதுவகை கொரோனா தொற்று …

Leave a Reply

Your email address will not be published.

MyHoster