Breaking News
Home / இந்தியா / வாகா எல்லையை திறக்க இந்தியா-பாக்., அனுமதி; பஞ்சாப் முதல்வர் நன்றி

வாகா எல்லையை திறக்க இந்தியா-பாக்., அனுமதி; பஞ்சாப் முதல்வர் நன்றி

சண்டிகர்: குரு நானக் பிறந்தநாளை முன்னிட்டு வாகா எல்லையை திறக்க இந்தியா-பாக்., அரசுகள் அனுமதியளித்துள்ளன. இதற்கு பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் நன்றி தெரிவித்துள்ளார்.

சீக்கிய மதத் தலைவர் ஸ்ரீ குரு நானக் தேவ்-ன் 552 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் இருக்கும் குருநானக் தனது வாழ்நாளின் கடைசி 18 ஆண்டுகளைக் கழித்ததாகக் கூறப்படும் ஸ்ரீ கர்தார்பூர் கோயிலை இந்தியாவிலுள்ள சீக்கியர்கள் தரிசிக்க, வாகா எல்லையை திறந்ததற்கு இந்திய மற்றும் பாகிஸ்தான் அரசுகளுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி.

இதற்காக வாகா எல்லை ஒன்பது நாட்கள் திறக்கப்பட்டுள்ளன. இன்று துவங்கி வரும் நவம்பர் 26 ஆம் தேதிவரை கிட்டத்தட்ட 2,500 சீக்கியர்கள் வாகா எல்லையை தாண்டி ஸ்ரீ கர்தார்பூர் சாஹிப் கோயிலுக்கு சென்று குருநானக் தேவ்-ஐ தரிசிக்க உள்ளனர்.இதன் முதல் பகுதியாக இன்று சீக்கியப் பெண்கள் உட்பட 28 பேர் வாகா எல்லையை கடந்து பாகிஸ்தான் பஞ்சாப் சென்றுள்ளனர். இவ்வாறு குழு குழுவாகப் பிரிக்கப்பட்டு சீக்கியர்கள் பாகிஸ்தான் பஞ்சாப்புக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

latest tamil news

பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் சரண்ஜித் சிங் வாகா எல்லையை திறந்து சீக்கிய மதத் தலைவரான குருநானக்கின் 552 ஆவது பிறந்தநாள் அன்று அவரை தரிசிக்க அனுமதி அளித்த மத்திய மோடி அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு கொரோனா தாக்கம் காரணமாக குருநானக் பிறந்த நாளன்று வாகா எல்லை திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எல்லைப் பிரச்னை மற்றும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் சீக்கிய மதத் தலைவரின் புனித கோயில் பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ளதால், ஆண்டுதோறும் நவம்பர் மாதம் எல்லையை திறக்க இரு நாடுகளுமே தொடர்ந்து ஒப்புக்கொள்வது குறிப்பிடத்தக்கது.

 

About Admin

Check Also

இந்தியாவில் புதுவகை உருமாறிய கொரோனா பாதிப்பில்லை: மத்திய அரசு

புதுடில்லி: தென்ஆப்ரிக்காவில் பி.1.1.529 என்ற புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், இந்தியாவில் இதுவரை இந்த புதுவகை கொரோனா தொற்று …

Leave a Reply

Your email address will not be published.

MyHoster