Sunday , October 17 2021
Breaking News
Home / இந்தியா / இந்தியாவில் ‘பூஸ்டர்’ தடுப்பூசி: 3வது கட்ட பரிசோதனைக்கு விரைவில் அனுமதி

இந்தியாவில் ‘பூஸ்டர்’ தடுப்பூசி: 3வது கட்ட பரிசோதனைக்கு விரைவில் அனுமதி

புதுடில்லி: ஐதராபாத்தைச் சேர்ந்த பயாலஜிக்கல் – இ நிறுவனம் தங்களது ‘கோர்பேவேக்ஸ்’ தடுப்பூசியின் 3வது கட்ட பரிசோதனைக்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது.

latest tamil news

கோவிட் வைரசுக்கு எதிராக, ஐதராபாத்தைச் சேர்ந்த ‘பயாலஜிக்கல் -இ’ என்ற மருந்து நிறுவனம், ‘கோர்பேவேக்ஸ்’ என்ற தடுப்பூசியை தயாரித்து உள்ளது. இந்நிறுவனம் 3வது கட்ட பரிசோதனை நடத்த அனுமதி கோரி, இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகத்தில் விண்ணப்பித்து உள்ளது. விண்ணப்பத்தில் தெரிவித்து உள்ளதாவது:
தற்போது இரு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட பலரது உடலில் நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்து வருகிறது. அதனால் சில நாடுகள் ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி போடத்தொடங்கி உள்ளன. வேறு சில நாடுகள் அதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளன.

latest tamil news

கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரண்டில் எந்த தடுப்பூசியின் இரு தவணைகளை செலுத்தி இருந்தாலும் இந்த, ‘கோர்பேவேக்ஸ்’ தடுப்பூசியை 3-வது பூஸ்டர் டோசாக செலுத்திக் கொள்ளலாம். இந்த தடுப்பூசியை 18 முதல் 80 வயதானவர்களுக்கு செலுத்தலாம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த தடுப்பூசிக்கு விரைவில் அனுமதி கிடைத்து, 3வது கட்ட பரிசோதனை தொடங்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About Admin

Check Also

தமிழகத்தில் கோவிட் பாதிப்பு 1,280 ஆக சற்று குறைந்துள்ளது: 1,453 பேர் நலம்

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,289 -ல் இருந்து 1,280 ஆக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster