Sunday , October 17 2021
Breaking News
Home / உலக செய்திகள் / அமெரிக்கா / வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதாரம் பாதிப்பு: ஐ.நா., கவலை

வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதாரம் பாதிப்பு: ஐ.நா., கவலை

நியூயார்க்: ‛‛கொரோனா பாதிப்பு காரணமாக வளர்ந்து வரும் நாடுகள் பலவும் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளன,” என்று ஐ.நா., பொதுச்செயலாளர் கவலை தெரிவித்துள்ளார்.

latest tamil news

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் சர்வதேச நிதியம் நடத்திய கொரோனா பாதிப்பு தொடர்பான நிகழ்ச்சியில் ஐ.நா., பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் பங்கேற்று பேசியதாவது:

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக 10 கோடிக்கும் மேற்பட்ட மக்களை வறுமையில் தள்ளிவிட்டது. 400 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு சமூக ஆதரவு குறைவாக உள்ளது. சில கோடி பேருக்கு சுத்தமாக இல்லை. சுகாதார பராமரிப்பு இல்லை. அவசரமாக தேவைப்படும்போது வருமான பாதுகாப்பு இல்லை.

latest tamil news

உலகம் 5 முதல் 6 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் பொருளாதார மீட்பின் மத்தியில் இருந்தாலும், வளர்ந்து வரும் நாடுகள் பலவும் பின்தங்கி உள்ளன. வலுவான பொருளாதார நாடுகள் மீட்புக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 28 சதவீத அளவுக்கு மீட்பு திட்டங்களில் முதலீடு செய்துள்ளன. ஆனால், குறைவான வளர்ச்சி அடைந்த நாடுகள், சராசரியாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.8 சதவீதம் தான் முதலீட்டுக்காக ஒதுக்க முடிகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

About Admin

Check Also

பிரான்சிலிருந்து மேலும் மூன்று ரபேல் போர் விமானங்கள் குஜராத் வருகை

புதுடில்லி : ஐரோப்பிய நாடான பிரான்சில் இருந்து மேலும் மூன்று புதிய ரபேல் போர் விமானங்கள் இன்று குஜராத்தில் தரையிறங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster