Sunday , October 17 2021
Breaking News
Home / இந்தியா / நடப்பாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி.,யில் கடன் 90 சதவீதமாக ஆக உயரும்: ஐ.எம்.எப்.,

நடப்பாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி.,யில் கடன் 90 சதவீதமாக ஆக உயரும்: ஐ.எம்.எப்.,

புது டில்லி: கோவிட் மற்றும் அதனை கட்டுப்படுத்த வகுத்த கொள்கைகளால் உலக நாடுகளின் கடன் அளவு புதிய உச்சத்தை தொட்டிருப்பதாகவும், இந்தியாவின் கடன் அளவு நடப்பு ஆண்டில் ஜி.டி.பி.,யில் 90.6 சதவீதம் ஆக உயரக்கூடும் என ஐ.எம்.எப்., நிதி விவகாரத் துறை இயக்குநர் தெரிவித்தார்.

latest tamil news

நடப்பு ஆண்டுக்கான நிதி கண்காணிப்பு அறிக்கையினை ஐ.எம்.எப்., வெளியிட்டது. அதில்,
“2020-ல் உலகளாவிய கடன் 226 டிரில்லியன் டாலர் என்ற புதிய உச்சத்திற்கு உயர்ந்துள்ளது.
2019-ல் இது வெறும் 27 டிரில்லியன் டாலராக இருந்தது. இந்த கடன் எண்ணிக்கை அரசாங்கங்கள், குடும்பங்கள் மற்றும் நிதி சாரா நிறுவனங்களை உள்ளடக்கியது. இதுவரை பதிவான கடன் அளவுகளில் இதுவே மிகப்பெரியது. அதில் வளர்ந்த பொருளாதாரங்கள் மற்றும் சீனாவின் பங்கு 90 சதவீதத்திற்கு மேலாக உள்ளது. வளர்ந்து வரும் பொருளாதாரங்கள் மற்றும் குறைந்த வருவாய் நாடுகளின் கடன் அளவோ சுமார் 7 சதவீதம் மட்டுமே.” என குறிப்பிட்டுள்ளனர்.

latest tamil news

 

இது பற்றி ஐ.எம்.எப்., நிதி விவகாரத் துறை இயக்குநர் விட்டர் காஸ்பர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவிட் மற்றும் அதனை கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட கொள்கைகளால் கடன் அளவுகள் வேகமாக அதிகரித்து உச்சத்தை அடைந்துள்ளன. பொது மற்றும் தனியார் கடன்களின் உயர்வு நிதி ஸ்திரத்தன்மை மற்றும் பொது நிதி சார்ந்த அபாயங்களை ஏற்படுத்தக் கூடும். இந்தியாவின் கடன் 2016-ல் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 68.9 சதவீதத்தில் இருந்தது, 2020 ல் 89.6 சதவீதமாக அதிகரித்தது. 2021-ல் 90.6 சதவீதமாக உயரக்கூடும்.
2022-ல் இருந்து படிப்படியாக குறையும். என்றார்.

About Admin

Check Also

பிரான்சிலிருந்து மேலும் மூன்று ரபேல் போர் விமானங்கள் குஜராத் வருகை

புதுடில்லி : ஐரோப்பிய நாடான பிரான்சில் இருந்து மேலும் மூன்று புதிய ரபேல் போர் விமானங்கள் இன்று குஜராத்தில் தரையிறங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster