Sunday , October 17 2021
Breaking News
Home / இந்தியா / பிரான்சிலிருந்து மேலும் மூன்று ரபேல் போர் விமானங்கள் குஜராத் வருகை

பிரான்சிலிருந்து மேலும் மூன்று ரபேல் போர் விமானங்கள் குஜராத் வருகை

புதுடில்லி : ஐரோப்பிய நாடான பிரான்சில் இருந்து மேலும் மூன்று புதிய ரபேல் போர் விமானங்கள் இன்று குஜராத்தில் தரையிறங்க உள்ளன.

ஐரோப்பிய நாடான பிரான்சில் இருந்து ரூ.58 ஆயிரம் கோடி மதிப்பிலான 36 புதிய ரபேல் போர் விமானங்களை வாங்க கடந்த 2016ல் மத்திய அரசு ஒப்பந்தம் போட்டது.முதல்கட்டமாக ஐந்து ரபேல் போர் விமானங்கள் ஹரியானாவின் அம்பாலா விமானப்படை தளத்திற்கு வந்து சேர்ந்தன. அதன் பின் பல்வேறு கட்டங்களாக ரபேல் போர் விமானங்கள் நம் நாட்டுக்கு வந்து சேர்ந்தன.

latest tamil news

இந்நிலையில் மேலும் மூன்று புதிய ரபேல் போர் விமானங்கள் பிரான்சில் இருந்து தொடர்ச்சியாக 6 மணி நேரம் பயணித்து இன்று (அக்.13) குஜராத்தின் ஜாம் நகரில் உள்ள விமான படைதளத்திற்கு வந்திறங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை விமானப்படை செய்து வருகிறது.

About Admin

Check Also

வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதாரம் பாதிப்பு: ஐ.நா., கவலை

நியூயார்க்: ‛‛கொரோனா பாதிப்பு காரணமாக வளர்ந்து வரும் நாடுகள் பலவும் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளன,” என்று ஐ.நா., பொதுச்செயலாளர் கவலை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster