Sunday , October 17 2021
Breaking News
Home / இந்தியா / பெற்றோரை படுகொலை செய்த குற்றவாளிக்கு 28 ஆண்டுகளுக்கு பின் தண்டனை

பெற்றோரை படுகொலை செய்த குற்றவாளிக்கு 28 ஆண்டுகளுக்கு பின் தண்டனை

திருவனந்தபுரம்: காசர்கோட்டில் 28 ஆண்டுகளுக்கு முன் பெற்றோரை கொலை செய்தவருக்கு தற்போது ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது.

latest tamil news

கேரள மாநிலம் காசர்கோட்டில் கடந்த 1993ம் ஆண்டு மார்ச் 22ல் சதாசிவம் என்பவர் தன் பெற்றோரை கோடாரியால் வெட்டி படுகொலை செய்தார். வானொலியில் சத்தத்தைக் குறைக்குமாறு, சதாசிவத்தின் தாய் கூறியதால் எழுந்த வாக்குவாதத்தில், சதாசிவம் தன் பெற்றோரை வெட்டிக் கொன்றது விசாரணையில் தெரியவந்தது. இதை, சதாசிவத்தின் மனைவியும், அப்போது 4 மற்றும் 5 வயதில் இருந்த அவரது பிள்ளைகளும் பார்த்துள்ளனர். இந்த வழக்கில் இவர்கள் முக்கிய சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர்.

latest tamil news

இந்த வழக்கில், கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி உன்னி கிருஷ்ணன், ‘சதாசிவம் கொலை செய்தது உறுதியாகியுள்ளது. அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது’ எனத் தீர்ப்பளித்துள்ளார். தன் பெற்றோரைக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சதாசிவம் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர், அரசு மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு கடந்த 2018 வரை சிகிச்சை பெற்று குணமடைந்தார். அதன் பிறகு இந்த வழக்கின் விசாரணை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

About Admin

Check Also

நடப்பாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி.,யில் கடன் 90 சதவீதமாக ஆக உயரும்: ஐ.எம்.எப்.,

புது டில்லி: கோவிட் மற்றும் அதனை கட்டுப்படுத்த வகுத்த கொள்கைகளால் உலக நாடுகளின் கடன் அளவு புதிய உச்சத்தை தொட்டிருப்பதாகவும், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster