Sunday , October 17 2021
Breaking News
Home / இந்தியா / ஆர்யான் ‘ஜாமின்’ மனு: அக். 13ல் விசாரணை

ஆர்யான் ‘ஜாமின்’ மனு: அக். 13ல் விசாரணை

மும்பை : போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக் கானின் மகன் ஆர்யானின், ‘ஜாமின்’ மனுவை மும்பை சிறப்பு நீதிமன்றம் அக்.13ம் தேதி விசாரிக்க உள்ளது.

 

latest tamil news

 

மஹாராஷ்டிர தலைநகர் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப் பொருள் ‘பார்ட்டி’ நடந்த சம்பவத்தில் பாலிவுட் நடிகர் ஷாரூக் கானின் மகன் ஆர்யான் கான் உள்ளிட்டோர் சிக்கினர். மும்பை, ஆர்தர் சாலை சிறையில் ஆர்யான் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில், இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

latest tamil news

 

ஜாமின் கேட்டு ஆர்யான் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க, மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மறுத்தது. இதையடுத்து மும்பையில் உள்ள போதைப் பொருள் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் ஆர்யான் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று (அக்.11) விசாரணைக்கு வந்தபோது, பதில் மனு தாக்கல் செய்ய போதைப் பொருள் தடுப்பு பிரிவின் சார்பில் ஒரு வாரம் அவகாசம் கேட்கப்பட்டது. அதற்கு ஆர்யான் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஜாமின் மனுவை அக். 13-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சிறப்பு நீதிமன்றம் தெரிவித்தது.

About Admin

Check Also

நடப்பாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி.,யில் கடன் 90 சதவீதமாக ஆக உயரும்: ஐ.எம்.எப்.,

புது டில்லி: கோவிட் மற்றும் அதனை கட்டுப்படுத்த வகுத்த கொள்கைகளால் உலக நாடுகளின் கடன் அளவு புதிய உச்சத்தை தொட்டிருப்பதாகவும், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster