Sunday , October 17 2021
Breaking News
Home / உலக செய்திகள் / ஹிந்து பாரம்பரிய மாதமாக கொண்டாட்டம்: கரோலினா கவர்னர் அறிவிப்பு

ஹிந்து பாரம்பரிய மாதமாக கொண்டாட்டம்: கரோலினா கவர்னர் அறிவிப்பு

வடக்கு கரோலினா: அக்டோபர் மாதத்தை ஹிந்து பாரம்பரிய மாதமாக அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாண கவர்னர் அறிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் ஹிந்து மதம் பரவியுள்ளன. சதவீத அடிப்படையில் ஹிந்து மத மக்கள் அதிகம் உள்ள நாடாக நேபாளம் உள்ளது. அதனைத்தொடர்ந்து, இந்தியா, மொரிசீயஸ் நாடுகள் உள்ளதாக சில ஆய்வறிக்கை தெரிவிக்கின்றன. அந்த வகையில், ஹிந்து மக்களையும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களையும் உலகின் பெரும்பாலான நாடுகளிலும் காணமுடிகிறது. கிட்டத்தட்ட 100 கோடி ஹிந்துக்கள் உலகின் எல்லா பகுதிகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாண கவர்னர் ராய் கூப்பர், அக்டோபர் மாதத்தை ஹிந்து பாரம்பரிய மாதமாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பு:
ஹிந்து மதம் உலகின் மூன்றாவது பெரிய மதமாகும். உலகளவில் ஹிந்து மதத்தில் நூறு கோடி பக்தர்களும், அமெரிக்காவில் மட்டும் 40 லட்சம் பக்தர்களும் உள்ளனர். ஹிந்து பாரம்பரியம், கலாச்சாரம், மரபுகள் மற்றும் மதிப்புகள் ஆகியன வாழ்க்கையின் பல பிரச்னைகளுக்கு விலைமதிப்பற்ற தீர்வுகளை வழங்குகின்றன. மேலும் ஹிந்து மதத்தின் போதனைகளைப் பார்க்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு உத்வேகத்தையும் சிந்தனையையும் தருகிறது.

latest tamil news

எங்களுடைய துடிப்பான ஹிந்து அமெரிக்க சமூகம், வடக்கு கரோலினா மாகாண குடிமக்களின் வாழ்க்கையை வளப்படுத்தி பெரும் பங்களிப்பு செய்துள்ளது. இந்தாண்டு அக்டோபர் மாதத்தில், வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள ஹிந்து சமூகம், ஹிந்து மதத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கூட்டாக கொண்டாடும். இதன்மூலம் நடப்பு அக்டோபர் மாதத்தை, வடக்கு கரோலினா மாகாணத்தில் ‛ஹிந்து பாரம்பரிய மாதமாக’ அனைத்து குடிமக்களும் பின்பற்றுமாறு அறிவிக்கிறேன். இவ்வாறு கவர்னர் ராய் கூப்பர் தெரிவித்துள்ளார்.

About Admin

Check Also

நவராத்திரி கொண்டாடிய இலங்கை பிரதமர் ராஜபக்சே

கொழும்பு: நவராத்திரிவிழாவை, இலங்கை பிரதமர் ராஜபக்சே, தனது குடும்பத்தினருடன் கொண்டாடினார். தலைநகர் கொழும்புவில் உள்ள பிரதமரின் இல்லத்தில் இன்று (அக்.14) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster