Sunday , October 17 2021
Breaking News
Home / இந்தியா / லக்கிம்பூர் வன்முறை வழக்கு : ஆஷிஷ் மிஸ்ராவுக்கு மூன்று நாள் காவல்

லக்கிம்பூர் வன்முறை வழக்கு : ஆஷிஷ் மிஸ்ராவுக்கு மூன்று நாள் காவல்

லக்னோ: உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் வன்முறையில் எட்டு பேர் கொல்லப்பட்ட வழக்கில் கைதாகி உள்ள மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவுக்கு மூன்று நாள் போலீஸ் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
உ.பி.,யில் லக்கிம்பூரில் கடந்த வாரம் நடக்கவிருந்த பா.ஜ., கூட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக வந்த கார் மோதி, நான்கு விவசாயிகள் பலியாகினர். அந்த காரில், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாக கூறப்படுகிறது.

latest tamil news

ஆஷிஷ் மிஸ்ரா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கடந்த 9ல் விசாரணைக்கு ஆஜரான ஆஷிஷ் மிஸ்ராவிடம் 12 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தி ஆஷிஷ் மிஸ்ராவை கைது செய்தனர்.அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

இந்நிலையில், ஆஷிஷ் மிஸ்ரா விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, அனுமதி அளிக்கும்படி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.இதையடுத்து அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு மூன்று நாள் போலீஸ் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

About Admin

Check Also

நடப்பாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி.,யில் கடன் 90 சதவீதமாக ஆக உயரும்: ஐ.எம்.எப்.,

புது டில்லி: கோவிட் மற்றும் அதனை கட்டுப்படுத்த வகுத்த கொள்கைகளால் உலக நாடுகளின் கடன் அளவு புதிய உச்சத்தை தொட்டிருப்பதாகவும், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster