Sunday , October 17 2021
Breaking News
Home / இந்தியா / திருமணத்திற்காக, சுயநலத்துடன் நடைபெறும் மதமாற்றங்கள்: மோகன் பாகவத் சாடல்

திருமணத்திற்காக, சுயநலத்துடன் நடைபெறும் மதமாற்றங்கள்: மோகன் பாகவத் சாடல்

புதுடில்லி: திருமணத்திற்காக, சுயநலத்துடன் மதமாற்றங்கள் நடைபெறுவதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். உத்தரகண்ட் மாநிலம் ஹல்ட்வானிக்கு மோகன் பகவத் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கு ஆர்எஸ்எஸ் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டார்.

latest tamil news

மோகன் பாகவத் பேசியதாவது: நம் நாட்டில் இந்து குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கு இந்து மத பெருமைகளையும் கருத்துகளையும் கற்றுத் தருவதில்லை . திருமணம் என்ற ஒன்றுக்காகச் சுயநல நலத்துடன் மதமாற்றம் செய்து கொள்கிறார்கள். இது மிக மிகத் தவறான ஒரு விஷயம். ஆனால் இதில் அவர்களை மட்டும் நாம் குறை சொல்ல முடியாது. நாம் நமது குழந்தைகளைத் தயார் செய்யவில்லை. இந்து மதத்தின் மரபுகளை இந்தியக் குடும்பங்கள் தான் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

latest tamil news

நமது மதத்தின் பெருமைகளை மற்றும் மரபுகள் குறித்து நாம்தான் நமது குழந்தைகளுக்குச் சொல்லித் தர வேண்டும். இன்று ஓடிடி தளங்களில் அனைத்து வகையான வீடியோக்களும் வருகின்றன. அதில் வருபவை நமது குழந்தைகளுக்கும் சரி சமூகத்திற்கும் சரி நல்ல கண்ணோட்டத்துடன் கூடியது இல்லை. வீட்டில் எதைப் பார்க்க வேண்டும், எதைப் பார்க்கக் கூடாது என்பதை நம் குழந்தைகளுக்கு நாம் கற்பிக்க வேண்டும். நமது குடும்ப முறையை சீர்குலைக்க மேற்கு உலக நாடுகள், போதைப்பொருள் மூலம் அடிமையாக்க நினைக்கிறார்கள். இவ்வாறு மோகன் பாகவத் பேசினார்.

About Admin

Check Also

நடப்பாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி.,யில் கடன் 90 சதவீதமாக ஆக உயரும்: ஐ.எம்.எப்.,

புது டில்லி: கோவிட் மற்றும் அதனை கட்டுப்படுத்த வகுத்த கொள்கைகளால் உலக நாடுகளின் கடன் அளவு புதிய உச்சத்தை தொட்டிருப்பதாகவும், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster