Sunday , October 17 2021
Breaking News
Home / தமிழகம் / சென்னை / ஏற்றுமதியில் தமிழகத்தை முதலிடத்திற்கு கொண்டு வர நடவடிக்கை: முதல்வர்

ஏற்றுமதியில் தமிழகத்தை முதலிடத்திற்கு கொண்டு வர நடவடிக்கை: முதல்வர்

சென்னை: இந்தியாவில், ஏற்றுமதியில் தமிழகத்தை முதலிடத்திற்கு கொண்டு வர தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: தெற்கு ஆசியாவிலேயே தொழில் முதலீட்டிற்கு ஏற்ற மாநிலம் தமிழகம். புதிய தொழில்களை துவங்குவதற்கு உள்கட்டமைப்புகளை சீர்செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அனைத்து மாவட்டங்களையும், அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதே தமிழக அரசின் நோக்கம்.

latest tamil news

திமுக அரசின் 4 மாத ஆட்சி காலத்தில் தொழில்துறை புத்துணர்ச்சி அடைந்துள்ளது. இந்தியாவில் ஏற்றுமதியில் 3வது பெரிய மாநிலமாக உள்ள தமிழகத்தை, முதலிடத்திற்கு கொண்டு வர தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

About Admin

Check Also

உள்ளாட்சி தேர்தல் வெற்றி ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க பெரும்பாலான இடங்களில் வெற்றிப்பெற்றதை அடுத்து, உள்ளாட்சி தேர்தல் வெற்றி ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster