Sunday , October 17 2021
Breaking News
Home / இந்தியா / மின்சார விநியோகத்திற்கு இடையூறு இருக்காது: மத்திய அமைச்சர் உறுதி

மின்சார விநியோகத்திற்கு இடையூறு இருக்காது: மத்திய அமைச்சர் உறுதி

புதுடில்லி: ‛‛கோல் இந்தியா நிறுவனத்திடம், 24 நாட்களுக்கு தேவையான 43 மில்லியன் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளதாகவும், மின்சார விநியோகத்தில் எந்த இடையூறும் ஏற்படாது என அனைவரிடமும் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்,” என, மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்து உள்ளார்.

நாட்டின் மொத்த மின் தேவையில் 70 சதவீதம், நிலக்கரி வாயிலாக இயக்கப்படும் அனல் மின் நிலையங்களில் இருந்தே கிடைக்கிறது. நாடு முழுதும் உள்ள 135 அனல் மின் நிலையங்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானவை, போதிய நிலக்கரி இல்லாமல் மின் உற்பத்தி குறைந்து உள்ளது. கடும் மின் தடையை சந்திக்க நேரிடும் நிலையில் உள்ளதாக தமிழகம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் ஏற்கனவே கூறியுள்ளன. இது தொடர்பாக பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் டாடா எரிசக்தி நிறுவனம் ஆகியவற்றுடன் மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் கூறியதாவது: டில்லிக்கு தேவையான அளவு மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. அது தொடரும். பவானா காஸ் மின்சார நிறுவனத்திற்கு, ‘கெயில்’ அனுப்பிய செய்தியில், ஒப்பந்தம் 2 நாளில் முடிவடைய உள்ளதால் நிலக்கரி உற்பத்தி நிறுத்தப்படும் என தெரிவித்தது. இதனையடுத்தே பீதி ஏற்பட்டுள்ளது. இன்றைய கூட்டத்தில், நிலக்கரியை தொடர்ந்து வழங்கும்படி கூறியுள்ளேன்.

latest tamil news

மேலும், நாடு முழுவதும் உள்ள மின்சார நிறுவனங்களுக்கு தேவையான காஸ் வழங்க வேண்டும் எனவும் ‘கெயில்’ நிறுவனத்திடம் தெரிவித்துள்ளேன். அதன்படி, காஸ் விநியோகம் தொடர்ந்து நடக்கும். கடந்த காலங்களில் காஸூக்கு பற்றாக்குறை ஏற்படவில்லை. இனி வரும் காலத்திலும் ஏற்படாது. இதனால், இந்த விவகாரத்தில் எந்த பீதியும் ஏற்படவில்லை. தேவையில்லாமல் உருவாக்கப்பட்டு உள்ளது. பீதியை ஏற்படுத்தும் வகையில், ஆதாரமற்ற செய்திகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பக்கூடாது என டாடா நிறுவன சி.இ.ஓ.,விடம் தெரிவித்துள்ளேன். ‘கெயில்’ மற்றும் டாடா நிறுவனங்களின் செய்திகள், பொறுப்பற்ற நடத்தையின் செயல்களின் கீழ் வருகிறது.

ஒவ்வொரு அனல்மின் நிலையத்திலும், 4 நாட்களுக்கு மேல் தேவையான அளவு நிலக்கரி கையிருப்பு உள்ளது. ஒவ்வொரு நாளும் நிலக்கரி அனுப்பி வைக்கப்படுகிறது. நிலக்கரித்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷியுடன் தொடர்பில் உள்ளேன். காங்கிரஸ் கட்சியிடம் எந்த கொள்கையும் இல்லாதது துரதிர்ஷ்டவசம். ஓட்டுக்கள் இல்லாமல் இருக்கும் அவர்களிடம் கொள்கையும் இல்லாமல் போனது. இவ்வாறு அமைச்சர் ஆர்.கே.சிங் கூறினார்.

latest tamil news

மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறியதாவது: மின்சார விநியோகத்தில் எந்த இடையூறும் ஏற்படாது என்பதை உறுதியுடன் தெரிவித்து கொள்கிறேன். கோல் இந்தியா நிறுவனத்திடம், 24 நாட்களுக்கு தேவையான 43 மில்லியன் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளது. அனல்மின் நிலையங்களுக்கு, தேவைக்கு ஏற்ப தினசரி நிலக்கரி அனுப்பி வைக்கப்படுகிறது. பருவமழை காலம் நிறைவு பெறுகிறது. இதனால், நிலக்கரி கையிருப்பு அதிகரிப்பதுடன், மீண்டும் அனுப்பி வைக்கப்படும். போதுமான நிலக்கரி கையிருப்பு உள்ளது. பயத்தை உண்டாக்கும் செய்திகளை நம்ப வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

About Admin

Check Also

நடப்பாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி.,யில் கடன் 90 சதவீதமாக ஆக உயரும்: ஐ.எம்.எப்.,

புது டில்லி: கோவிட் மற்றும் அதனை கட்டுப்படுத்த வகுத்த கொள்கைகளால் உலக நாடுகளின் கடன் அளவு புதிய உச்சத்தை தொட்டிருப்பதாகவும், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster