Sunday , October 17 2021
Breaking News
Home / இந்தியா / காலிஸ்தானுடன் தொடர்பு படுத்தப்படும் விவசாயிகள்; விமர்சிக்கும் வருண்

காலிஸ்தானுடன் தொடர்பு படுத்தப்படும் விவசாயிகள்; விமர்சிக்கும் வருண்

புதுடில்லி: லக்கிம்பூர் கெரி விவகாரம் குறித்து பா.ஜ., எம்.பி., வருண் தொடர்ந்து சமூக வலைதளமான டிவிட்டரில் விமர்சனத்தை முன்வைத்து வருகிறார். இதனை காலிஸ்தானுடன் தொடர்புபடுத்தி ஹிந்து-சீக்கிய மதக் கலவரமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் காட்டமாக விமர்சித்துள்ளார்.

பார்லிமென்ட்டின் கீழ் அவையில் மூன்றாவது முறையாக உறுப்பினராகத் தேர்வு செய்யப் பட்டு உள்ள பா.ஜ.,வின் மூத்த அரசியல் தலைவர் வருண். லக்கிம்பூர் கெரி விவகாரம் குறித்து தொடர்ந்து வருண் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதால் முன்னதாக இவர் பா.ஜ.,வின் தேசிய செயலாளர் கமிட்டி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனாலும், தொடர்ந்து வருண் தனது கருத்துக்களை டிவிட்டரில் பதிவிட்டு வருகிறார்.

latest tamil news

லக்கிம்பூர் கேரி விவசாயிகள் படுகொலை விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வருண் தனது டிவிட்டர் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார். பா.ஜ., பார்லிமென்ட் உறுப்பினரே இந்த விவகாரத்தில் தான் சார்ந்திருக்கும் கட்சியை விமர்சித்து வருவது பல்வேறு ஊகங்களுக்கு வித்திட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பா.ஜ., யூனியன் அமைச்சர் அஜய் மிஸ்ரா முன்னதாக லக்கிம்பூர் கெரி விவகாரத்தை காலிஸ்தான் பயங்கரவாதிகள் பெரிது படுத்துகின்றனர் என்று குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு தற்போது வருண் பதிலளித்துள்ளார்.

மேட்டுக்குடி மனப்பான்மை காரணமாக ஏழை விவசாயிகள் கொல்லப் பட்டுள்ளதாகவும் இந்த விவகாரத்தில் மதத்தை தொடர்பு படுத்துவது தவறு என்றும் வருண் காந்தி கூறியுள்ளார். சீக்கிய பயங்கரவாத அமைப்பான காலிஸ்தான் தொடர்ந்து பல வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறது.

பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பகுதிகளில் சீக்கிய விவசாயிகள் சர்ச்சைக்குரிய விவசாய மசோதாக்களுக்கு எதிராக போராடி வருகின்றனர். போராடும் விவசாயிகளை காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் அஜய் மிஸ்ரா தொடர்பு படுத்தியது தற்போது பலத்த கண்டனத்தை பெற்றுள்ளது.

இதுகுறித்து வருண் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறுகையில், ‛’விவசாயிகள் போராட்டத்தை ஹிந்து-சீக்கிய மதப் போராட்டமாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தவறான செயல் மட்டுமல்ல, பலகாலமாக சீக்கியர்கள்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மீண்டும் தூண்டிவிடும் வகையில் அமைந்துள்ளது. இது மிகவும் ஆபத்தானது. தேசிய ஒருமைப்பாட்டில் அரசியல் லாபத்திற்கான செயல்களில் ஈடுபடக்கூடாது,” என தெரிவித்துள்ளார்.

About Admin

Check Also

நடப்பாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி.,யில் கடன் 90 சதவீதமாக ஆக உயரும்: ஐ.எம்.எப்.,

புது டில்லி: கோவிட் மற்றும் அதனை கட்டுப்படுத்த வகுத்த கொள்கைகளால் உலக நாடுகளின் கடன் அளவு புதிய உச்சத்தை தொட்டிருப்பதாகவும், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster