Sunday , October 17 2021
Breaking News
Home / இந்தியா / ஆர்யன் கானின் கார் ஓட்டுநரிடம் என்சிபி அதிகாரிகள் விசாரணை

ஆர்யன் கானின் கார் ஓட்டுநரிடம் என்சிபி அதிகாரிகள் விசாரணை

மும்பை: ஆர்யன் கானின் வாகனத்தை ஓட்டி சென்ற ஓட்டுநரிடம் தற்போது என் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு அவரது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.

latest tamil news

தெற்கு மும்பையில் இருந்து கோவாவை நோக்கிச் சென்ற சொகுசு கப்பலில் முன்னதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் பயணித்தார். கப்பலில் நடந்த மது விருந்தில் திடீரென போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் நள்ளிரவில் சோதனை நடத்தியபோது சந்தேகத்தின் அடிப்படையில் ஆரியன் உட்பட 7 பேர் கைதாகினர்.

ஆர்யன் கானிடம் போதைப்பொருள் எதுவும் கைப்பற்றப்படாதபோதும் அவருக்கு தற்போது மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துள்ளது. சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் ஆர்யன் வாட்ஸ் அப்பில் சங்கேத வார்த்தைகள் மூலமாக சாட் செய்துள்ளதாக என்சிபி தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

latest tamil news

தற்போது இந்த வழக்கு குறித்து என் சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆர்யன் கான் தனது மும்பை வீட்டிலிருந்து துறைமுகத்துக்கு கார்மூலம் சென்று உள்ளார். இந்த காரை ஓட்டிய ஓட்டுநரிடம் தற்போது அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு அவரது வாக்குமூலத்தை ஆடியோ பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து மேற்கொண்டு ஆர்யனுக்கு தொடர்புடைய பலரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

About Admin

Check Also

நடப்பாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி.,யில் கடன் 90 சதவீதமாக ஆக உயரும்: ஐ.எம்.எப்.,

புது டில்லி: கோவிட் மற்றும் அதனை கட்டுப்படுத்த வகுத்த கொள்கைகளால் உலக நாடுகளின் கடன் அளவு புதிய உச்சத்தை தொட்டிருப்பதாகவும், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster