Sunday , October 17 2021
Breaking News
Home / உலக செய்திகள் / இங்கிலாந்து / கோவிட் சாதாரண ஜலதோஷ வைரசாக மாறும்: இங்கிலாந்து மருத்துவ வல்லுநர் கணிப்பு

கோவிட் சாதாரண ஜலதோஷ வைரசாக மாறும்: இங்கிலாந்து மருத்துவ வல்லுநர் கணிப்பு

புதுடில்லி: ‘கோவிட் வைரஸ் சாதாரண ஜலதோஷ வைரஸ் போல் மாறிவிடும்; ஆனால் அதற்கு நீண்ட காலம் ஆகும்’ என, இங்கிலாந்து தேசிய சுகாதார சேவையின் முன்னாள் தலைவர் சர் மால்கம் கிராண்ட் தெரிவித்துள்ளார்.

latest tamil news

டில்லியில் நடைபெற்ற மாநாட்டில், இங்கிலாந்து தேசிய சுகாதார சேவையின் முன்னாள் தலைவர் சர் மால்கம் கிராண்ட் பங்கேற்று தெரிவித்து உள்ளதாவது: கோவிட் வைரஸ் தொடர்பாக இன்னும் நாம் நிறைய புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. அதற்கு எதிராக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்தாலும், இன்னும் அது பெருந்தொற்றாகத்தான் தொடர்கிறது.

latest tamil news

அதிகப்படியான மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்திய அமெரிக்காவில் தற்போதும், கோவிட் வைரசால் வாரத்துக்கு 53 ஆயிரம் பேர் உயிரிழந்து வருகிறார்கள். இதைவிட ஐரோப்பாவின் நிலை மோசமாக இருக்கிறது; அங்கு வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது.ஆனால், கோவிட் வைரஸ் சாதாரண ஜலதோஷ வைரஸ் போல் மாறிவிடும். ஆனால் அதற்கு இன்னும் நீண்ட காலம் ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

About Admin

Check Also

நவராத்திரி கொண்டாடிய இலங்கை பிரதமர் ராஜபக்சே

கொழும்பு: நவராத்திரிவிழாவை, இலங்கை பிரதமர் ராஜபக்சே, தனது குடும்பத்தினருடன் கொண்டாடினார். தலைநகர் கொழும்புவில் உள்ள பிரதமரின் இல்லத்தில் இன்று (அக்.14) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster