Sunday , October 17 2021
Breaking News
Home / இந்தியா / நிலக்கரி தட்டுப்பாடு; தலைநகரில் மின்தடை ஏற்பட வாய்ப்பு: உதவக்கோரி பிரதமருக்கு கெஜ்ரிவால் கடிதம்

நிலக்கரி தட்டுப்பாடு; தலைநகரில் மின்தடை ஏற்பட வாய்ப்பு: உதவக்கோரி பிரதமருக்கு கெஜ்ரிவால் கடிதம்

புதுடில்லி: நாட்டின் தலைநகர் டில்லியில் மின் வினியோகம் சீராக இருக்க, நிலக்கரி, எரிவாயுவை ஏற்பாடு செய்து தரக் கோரி, பிரதமர் மோடிக்கு டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.

latest tamil news

இதுகுறித்து டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (அக்., 9) தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளதாவது:டில்லி ஆகஸ்ட் மாதம் முதல் நிலக்கரி பற்றாக்குறையை சந்தித்து வருகிறது. குறிப்பாக, ஆக., – செப்., மாதங்களைத் தொடர்ந்து 3வது மாதமாக நிலக்கரி பற்றாக்குறை நிலவுகிறது. இதனால், டில்லிக்கு மின்சாரம் வழங்கும் முக்கிய மத்திய மின் உற்பத்தி ஆலைகளில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இரு நாட்களில் டில்லியில் மின் தடை ஏற்படலாம்.

latest tamil news

இதனால், மத்திய அரசு போதுமான அளவு நிலக்கரியை மற்ற ஆலைகளில் இருந்து டில்லிக்கு மின் உற்பத்தி செய்யும் ஆலைகளுக்கு திருப்பி விட வேண்டும். அதேபோல் நகருக்கு மின் வினியோகம் செய்யும் பவானா, பிரகதி மற்றும் ஜி.டி.பி.எஸ்., ஆகிய ஆலைகளுக்கு எரிவாயுவை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.

About Admin

Check Also

நடப்பாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி.,யில் கடன் 90 சதவீதமாக ஆக உயரும்: ஐ.எம்.எப்.,

புது டில்லி: கோவிட் மற்றும் அதனை கட்டுப்படுத்த வகுத்த கொள்கைகளால் உலக நாடுகளின் கடன் அளவு புதிய உச்சத்தை தொட்டிருப்பதாகவும், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster