Sunday , October 17 2021
Breaking News
Home / உலக செய்திகள் / அமெரிக்கா / ‘கிரீன் கார்டு’ தாமதத்தை தவிர்க்க உத்தரவு: இந்தியர்கள் மகிழ்ச்சி

‘கிரீன் கார்டு’ தாமதத்தை தவிர்க்க உத்தரவு: இந்தியர்கள் மகிழ்ச்சி

வாஷிங்டன்:அமெரிக்காவில் ‘கிரீன் கார்டு’ வழங்குவதில் தாமதத்தை தவிர்க்கும்படி, அதிகாரிகளுக்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் வெளிநாட்டினர் நிரந்தரமாக தங்குவதற்கு ‘கிரீன் கார்டு’ பெற வேண்டும். ஆண்டுதோறும் ஒவ்வொரு நாட்டுக்கும் 7 சதவீதம் மட்டுமே கிரீன் கார்டுகளை அமெரிக்க குடியேற்றத்துறை வழங்கி வருகிறது.அமெரிக்காவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் இந்தியர்கள் பலர் ‘எச் ௧ பி’ விசா பெற்று, பணியாற்றி வருகின்றனர்.

latest tamil news

இவர்களில் பலர் கிரீன் கார்டு கேட்டு விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாக்கி கூறியதாவது:கிரீன் கார்டு வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால் உலகம் முழுதும் உள்ள திறமை மிக்க பணியாளர்களை பயன்படுத்திக் கொள்வது தடைபட்டுள்ளது.அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சியில் கிரீன் கார்டு வழங்குவதில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் இப்போது நீக்கப்பட்டு விட்டன.

அதனால் கிரீன் கார்டு வழங்குவதில் தாமதத்தை தவிர்க்க வேண்டும் என, அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். எனவே கிரீன் கார்டு வழங்கும் பணிவிரைவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். அமெரிக்க அதிபர் பைடனின் உத்தரவு அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர் களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

About Admin

Check Also

நவராத்திரி கொண்டாடிய இலங்கை பிரதமர் ராஜபக்சே

கொழும்பு: நவராத்திரிவிழாவை, இலங்கை பிரதமர் ராஜபக்சே, தனது குடும்பத்தினருடன் கொண்டாடினார். தலைநகர் கொழும்புவில் உள்ள பிரதமரின் இல்லத்தில் இன்று (அக்.14) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster