Sunday , October 17 2021
Breaking News
Home / இந்தியா / இந்தியா – டென்மார்க் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா – டென்மார்க் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

புதுடில்லி: இந்தியா வந்துள்ள டென்மார்க் பிரதமர் மீடே பிரெடரிக்சன் மற்றும் பிரதமர் மோடி முன்னிலையில் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

latest tamil news

 

டென்மார்க் பிரதமர் மீடே பிரெடரிக்சன் 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். டில்லியில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. டில்லி ராஜ்காட்டிற்கு சென்று மஹாத்மா காந்தி சமாதியில் மரியாதை செலுத்தினார்.

latest tamil news

இன்று காலை அவர், நமது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

latest tamil news

பின்னர், டில்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை அவர் சந்தித்தார். தொடர்ந்து, இரு நாட்டு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில், இரு முக்கிய விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்கள் மத்தியில் ஆலோசனை நடந்தது. இதன் முடிவில், இரு நாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

latest tamil news

பத்திரிகையாளர்களை கூட்டாக சந்தித்த போது, பிரதமர் மோடி கூறியதாவது; கோவிட் காலத்தில் இந்தியா டென்மார்க் இடையே ஒத்துழைப்பு தொடர்ந்து நிலவியது. காணொலி வாயிலாக நாங்கள் சந்தித்த போது, இரு தரப்பு உறவுகளை வலிமைப்படுத்துவது குறித்து ஆலோசித்தோம். இன்று இதனை ஆய்வு செய்தோம். சர்வதேச சோலார் கூட்டமைப்பில் டென்மார்க் உறுப்பினர் ஆனது மகிழ்ச்சியாக உள்ளது. இது அந்நாட்டுடனான இந்தியாவின் உறவுகளுக்கு புது பரிமாணத்தை ஏற்படுத்தும்.

latest tamil news

டென்மார்க் பிரதமர் கூறியதாவது: 10 லட்சம் வீடுகளுக்கு சுத்தமான குடிநீர் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவற்றில் பல முக்கியமான இலக்குகளை நிர்ணயித்து, உலகின் மற்ற நாடுகளுக்கு பிரதமர் மோடி முன்மாதிரியாக உள்ளார். டென்மார்க் வர வேண்டும் என்ற எனது அழைப்பை ஏற்று கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவும், டென்மார்க்கும் ஜனநாயக நாடுகள், விதிகளின் அடிப்படையில் சர்வதேச அமைப்புகளை நம்புபவை. பசுமை வளர்ச்சி மற்றும் பசுமை மாற்றம் ஒரு கையில் இருந்து மற்றொரு கைகளுக்கு செல்வதில் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மிகச்சிறந்த உதாரணமாக உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

latest tamil news

 

About Admin

Check Also

நடப்பாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி.,யில் கடன் 90 சதவீதமாக ஆக உயரும்: ஐ.எம்.எப்.,

புது டில்லி: கோவிட் மற்றும் அதனை கட்டுப்படுத்த வகுத்த கொள்கைகளால் உலக நாடுகளின் கடன் அளவு புதிய உச்சத்தை தொட்டிருப்பதாகவும், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster