Sunday , October 17 2021
Breaking News
Home / உலக செய்திகள் / சீனாவுடன் விரைவில் தைவானை இணைப்பேன்: ஜி ஜின்பிங்

சீனாவுடன் விரைவில் தைவானை இணைப்பேன்: ஜி ஜின்பிங்

பீஜிங்: சீனா – தைவான் இடையே பதற்றமான சூழல் நிலவும் நிலையில், ‘சீனா அமைதியான முறையில் தைவானுடன் இணைய விரும்புகிறது’ என, அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்து உள்ளார்.

latest tamil news

சீனாவில் கடந்த 1949ல் நடந்த உள்நாட்டுப் போருக்கு பின் தைவான் தனி நாடாக உருவானது. ஆனால் இதை ஏற்காத சீனா, தைவான் தங்களது ஒருங்கிணைந்த பகுதி என கூறி வருகிறது. ‘தைவானை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம்’ என, சீன அதிபர் ஜி ஜின்பிங் சில மாதங்களுக்கு கூறினார்.

இதையடுத்து, ‘சீனா கனவு காண்கிறது. தலிபான்களின் வழியை பின்பற்ற நினைக்கிறது. நாங்கள் எங்களை பாதுகாத்து கொள்வோம்’ என, தைவான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோசப் வூ தெரிவித்து இருந்தார்.

latest tamil news

இந்நிலையில் இன்று (அக்., 9) சீன கிரேட் ஹால்லில் நடந்த நிகழ்வில் சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்து உள்ளதாவது: சீனா தனது இறையாண்மையையும் ஒற்றுமையையும் எப்போதும் பாதுகாக்கும். தாய்நாட்டை முழுமையாக ஒன்றிணைக்கும் வரலாற்று பணி நிறைவேற்றப்பட வேண்டும். நிச்சயமாக நான் அதை நிறைவேற்ற பாடுபடுவேன். சீனா அமைதியான முறையில் தைவானுடன் இணைய விரும்புகிறது. தைவான் சுதந்திர பிரிவினைவாதம் தாய்நாட்டுடன் மீண்டும் இணைப்பதற்கு மிகப்பெரிய தடையாக உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

About Admin

Check Also

நவராத்திரி கொண்டாடிய இலங்கை பிரதமர் ராஜபக்சே

கொழும்பு: நவராத்திரிவிழாவை, இலங்கை பிரதமர் ராஜபக்சே, தனது குடும்பத்தினருடன் கொண்டாடினார். தலைநகர் கொழும்புவில் உள்ள பிரதமரின் இல்லத்தில் இன்று (அக்.14) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster