Sunday , October 17 2021
Breaking News
Home / தமிழகம் / அக்.,09: பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு

அக்.,09: பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு

சென்னை: சென்னையில் இன்று (அக்.,09), பெட்ரோல் லிட்டருக்கு 101.27 ரூபாய், டீசல் லிட்டருக்கு 96.93 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

latest tamil news

இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை அடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமலுக்கு வந்தது.

latest tamil news

அதன்படி நேற்று சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ 101.01 ஆகவும், டீசல் லிட்டர் ரூ 96.60 ஆகவும் விற்பனையானது. இந்நிலையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து, ரூ 101.27 ஆகவும் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகள் அதிகரித்து, ரூ 96.93 ஆகவும் உள்ளது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

About Admin

Check Also

உள்ளாட்சி தேர்தல் வெற்றி ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க பெரும்பாலான இடங்களில் வெற்றிப்பெற்றதை அடுத்து, உள்ளாட்சி தேர்தல் வெற்றி ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster