Sunday , October 17 2021
Breaking News
Home / தமிழகம் / இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் மழை பெய்ய வாய்ப்பு

இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை- –வரும், 12ம் தேதி வரை, பல மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

latest tamil news

சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, வடக்கு மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில், இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும். சென்னையில் இன்று சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.

நீலகிரி, கோவை, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் நாளை இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும். வேலுார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில், வரும், 11ம் தேதி கன மழை பெய்யும். வட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.

latest tamil news

நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில், 12ம் தேதி கன மழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில், நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இதனால், அந்தமான் கடல் பகுதிகள், தென் கிழக்கு வங்க கடல் பகுதிகள் மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிகளில், மணிக்கு 50 கி.மீ., வரை பலத்த காற்று வீசும். எனவே மீனவர்கள், இந்த பகுதிகளுக்கு 12ம் தேதி வரை செல்ல வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

About Admin

Check Also

உள்ளாட்சி தேர்தல் வெற்றி ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க பெரும்பாலான இடங்களில் வெற்றிப்பெற்றதை அடுத்து, உள்ளாட்சி தேர்தல் வெற்றி ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster