Sunday , October 17 2021
Breaking News
Home / கொரோனா / தமிழகத்தில் கோவிட் பாதிப்பு 1,432 ஆக சற்று குறைந்துள்ளது: 1,519 பேர் நலம்

தமிழகத்தில் கோவிட் பாதிப்பு 1,432 ஆக சற்று குறைந்துள்ளது: 1,519 பேர் நலம்

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,449 -ல் இருந்து 1,432 ஆக சற்று குறைந்துள்ளது. 25பேர் உயிரிழந்து உள்ளனர். 1,519 பேர் குணமடைந்து உள்ளனர்.

latest tamil news

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1,45,338 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 1,432பேருக்கு கோவிட் உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,72,843 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 4,78,90,758 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கோவிட் உறுதியானவர்களில் 839 பேர் ஆண்கள், 593பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 15,60,095 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 11,12,710 ஆகவும் அதிகரித்து உள்ளது. 1,519 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,20,499 ஆக உயர்ந்துள்ளது.

25 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.4 பேர் தனியார் மருத்துவமனையிலும் 21 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,707ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

சென்னை

சென்னையை பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 179ஆக இருந்த நிலையில் இன்று (அக்.6ம் தேதி) 176 ஆக குறைந்துள்ளது.

 

மாவட்ட வாரியாக விபரம்

latest tamil news
latest tamil news

About Admin

Check Also

வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதாரம் பாதிப்பு: ஐ.நா., கவலை

நியூயார்க்: ‛‛கொரோனா பாதிப்பு காரணமாக வளர்ந்து வரும் நாடுகள் பலவும் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளன,” என்று ஐ.நா., பொதுச்செயலாளர் கவலை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster