Sunday , October 17 2021
Breaking News
Home / அரசியல் / 9 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு இன்று தேர்தல்: பலத்த பாதுகாப்பு

9 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு இன்று தேர்தல்: பலத்த பாதுகாப்பு

சென்னை :ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற உள்ளது. ஓட்டுச் சாவடிகள், ‘சிசிடிவி’ வாயிலாக கண்காணிக்கப்பட உள்ளன. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில், 27 ஆயிரத்து மூன்று உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.

அதில், போட்டியின்றி தேர்வு, தேர்தல் நிறுத்தம், தேர்தல் புறக்கணிப்பு உள்ளிட்ட காரணங்களால் ஓட்டுப்பதிவு நடக்காதது போக, 23 ஆயிரத்து 998 பதவிகளுக்கு இன்றும், 9ம் தேதியும் இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கிறது. இப்பதவிகளை கைப்பற்ற, 79 ஆயிரத்து 433 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதேபோல, 28 மாவட்டங்களில் காலியாகவுள்ள 418 பதவிகளுக்கும், 9ம்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இப்பதவிகளை கைப்பற்ற 1,386 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இன்று நடக்கவுள்ள முதற்கட்ட தேர்தல் பாதுகாப்பு பணியில், 17 ஆயிரத்து 130 போலீசாரும், 3,405 ஊர்க்காவல் படையினரும் ஈடுபட உள்ளனர்.
காலை 7:௦௦ மணிக்கு துவங்கி, மாலை 6:௦௦ மணி வரை ஓட்டுப்பதிவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

latest tamil news

கொரோனா விதிகளை முறையாக பின்பற்றி, தேர்தல் நடத்த மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளான கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை 5:௦௦ மணிக்கு பின் ஓட்டளிக்க அனுமதிக்கப்படுவர். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, பதற்றமான ஓட்டுச்சாவடிகள் உட்பட அனைத்து ஓட்டுச்சாவடிகளும், ‘சிசிடிவி’ வாயிலாக கண்காணிக்கப்படவுள்ளன.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தில் இருந்து ‘ஆன்லைன்’ வாயிலாக ஓட்டுச்சாவடிகளை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், செயலர் சுந்தரவல்லி உள்ளிட்ட அதிகாரிகள், இப்பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

About Admin

Check Also

அவர்களும் குழம்பி, நாட்டு மக்களையும் குழப்பிக் கொண்டிருக்கின்றனர் என்று சொல்லுங்கள்!

பா.ஜ., தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் நடிகை குஷ்பூ அறிக்கை: பிரதமர் மோடி, 8,000 கோடி ரூபாய்க்கு இரண்டு விமானங்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster