Sunday , October 17 2021
Breaking News
Home / அரசியல் / இவராவது வெளிப்படையாக, அய்யப்பனை வணங்குகிறேன் என்கிறார். அது வரை பெருமைப்பட்டுக் கொள்ளுங்கள்

இவராவது வெளிப்படையாக, அய்யப்பனை வணங்குகிறேன் என்கிறார். அது வரை பெருமைப்பட்டுக் கொள்ளுங்கள்

தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை: பதவி ஏற்கும் போது ‘உளமார’ பதவி ஏற்றுவிட்டு, ‘நான் வணங்கும் அய்யப்பன் சத்தியமாக கோவில் சொத்துக்கள் முறைகேடாக பயன்படுத்தப்படாது’ என்கிறார் அமைச்சர். தனக்கு வேண்டுமென்றால் கடவுளை துணைக்கும், வேண்டாமெனில் கடவுளை கழட்டி விடுவது தான் உங்கள் பக்தியா அமைச்சரே?

 

இவராவது வெளிப்படையாக, அய்யப்பனை வணங்குகிறேன் என்கிறார். அது வரை பெருமைப்பட்டுக் கொள்ளுங்கள். முக்கால்வாசி தமிழக அமைச்சர்கள், ‘நான் ஈ.வெ.ரா.,வை தான் வழிபடுகிறேன்; கருணாநிதி தான் என் கண்கண்ட தெய்வம்’ என சொல்லி, தங்கள் வீடுகளின் பூஜையறைகளில் விதவிதமான சுவாமிகளை வைத்து மறைமுகமாக வணங்குகின்றனர்.

யாதவ மகா சபை தலைவர் தேவநாதன் யாதவ் அறிக்கை: ஹிந்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாதவர்களுக்கு, எதற்கு ஹிந்து மத கோவில்களின் வருமானம்… மதச்சார்பற்ற அரசு என்றால், மற்ற மத வழிபாட்டுத் தலங்களில் தலையிடாதது போல, ஹிந்து மத கோவில்களிலும் அரசு தலையிடாமல் இருக்கலாமே!

 

பேசாமல், ‘ஹிந்து மதச்சார்பற்ற தமிழக அரசு; பிற மதங்களை கண்டுகொள்ளாத அரசு’ என்று அறிவித்து விட்டு போகலாமே!


விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை
: உ.பி.,யில் நடந்துள்ள கொடூரம் நெஞ்சைப் பதற வைக்கிறது. மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ரா சென்ற கார், போராட்டத்தில் ஈடுபடா விவசாயிகள் மீது மோதச் செய்ததில் பலர் உயிரிழந்துள்ளனர். இதற்கு பொறுப்பேற்று முதல்வர் யோகி ராஜினாமா செய்ய வேண்டும்.

latest tamil news

 

உ.பி.,யில் ஏதாவது ஒரு குழப்பம் வரும் என எதிர்பார்த்து இருந்தது போல, கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும், உ.பி.,யை வரிசை கட்டி தாக்குகிறீர்களே!

கரூர் தொகுதி காங்., – எம்.பி., ஜோதிமணி அறிக்கை: 100 நாள் வேலை மட்டும் இல்லாவிட்டால் கிராமங்களில் பல குடும்பங்களில் பட்டினிச்சாவு நிகழ்ந்திருக்கும். சீமான் போன்ற பா.ஜ.,வின் ‘பி’ அணி, பா.ஜ.,வின் கருத்தை பிரதிபலிப்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.

 

‘நுாறு நாள் வேலை திட்டத்தால் தான், கிராமங்களில் வளர்ச்சி இல்லை; வறுமை தாண்டவம் ஆடுகிறது. விவசாயம் பாழடைகிறது’ என்பது நீண்ட காலமாக நிலவும் கருத்து. இயந்திரம் மூலம் தான் பெரும்பாலான விவசாய பணிகள் நடக்கின்றன. அதற்கு காரணம், காங்., தான்!

மார்க்சிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை: தொடர்ந்து போராடும் விவசாயிகளை அடக்கும் நோக்கத்துடனே உ.பி.,யில் அராஜகமான வன்முறைகள் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கோரிக்கைகளின் நியாயத்தை ஏற்க மறுக்கும், பா.ஜ., கூட்டம், கடுமையான அடக்குமுறையை கையில் எடுக்கிறது.

 

இப்படி வன்முறை நடக்கும் அதை வைத்து அரசியல் செய்யலாம் என்பது தான், மத்திய அரசுக்கு எதிரான கட்சிகளின் திட்டம், கடைசியில் எதிர்பார்த்தது போலவே நடந்தும் விட்டது!

About Admin

Check Also

அவர்களும் குழம்பி, நாட்டு மக்களையும் குழப்பிக் கொண்டிருக்கின்றனர் என்று சொல்லுங்கள்!

பா.ஜ., தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் நடிகை குஷ்பூ அறிக்கை: பிரதமர் மோடி, 8,000 கோடி ரூபாய்க்கு இரண்டு விமானங்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster