நக்சல் பிடியில் சிஆர்பிஎப் வீரர்: பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவிப்பு
ராய்ப்பூர் : சிஆர்பிஎப் வீரர் ஒருவர் தங்கள் பிடியில் உள்ளதாகவும், அவரை விடுவிக்க மத்திய அரசுடன் பேச தயாராக உள்ளதாக நக்சல்கள் தெரிவித்துள்ளனர்.சத்தீஸ்கரில், பீஜப்பூர், சுக்மா மாவட்டங்கள் எல்லையில் உள்ள வனப் பகுதியில் சமீபத்தில், சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போஸீஸ் படையினர் அடங்கிய கூட்டுப் படையினர், நக்சல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது, நக்சல்களுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், 22 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். ராகேஷ்வர் சிங் மான்ஹாஸ் என்ற வீரரை காணவில்லை. அவர், நக்சல்கள் பிடியில் இருப்பதாக செய்திகள் வெளியாகின. அவரை போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில் நக்சல்கள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், பீஜாப்பூர் தாக்குதலில் 24 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 31 பேர் காயமடைந்தனர். ஒரு வீரர் எங்களது பிடியில் உள்ளார். இந்த சம்பவத்தில் 4 நக்சல்கள் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசுடன் பேசுவதற்கு தயாராக உள்ளோம்.
இதற்காக மத்தியஸ்தர்களை அரசு நியமிக்க வேண்டும். எங்கள் பிடியில் உள்ள வீரரை விடுவிக்க தயார். போலீசார் எங்கள் எதிரிகள் அல்ல. இவ்வாறு அவர்கள் கூறியுள்னர்.