Saturday , April 17 2021
Breaking News
Home / அறிவியல் / பண்டைய மன்னர்களின் மம்மிகள் ஊர்வலம்

பண்டைய மன்னர்களின் மம்மிகள் ஊர்வலம்

பண்டைய மன்னர்களின் மம்மிகள் ஊர்வலம்
: 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எகிப்து நாட்டை ஆண்ட 18 மன்னர்கள், 4 ராணிகளின் பதப்படுத்தப்பட்ட உடல்கள் (மம்மிகள்) தேசிய அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது.எகிப்து நாட்டில் பிரமிடுகள் எனப்படும் கல்லறையில் இறந்த பண்டைய மன்னர்களின் உடல்கள் பதப்படுத்தி வைக்கப்பட்டு இருக்கும். இதற்கு ‘மம்மி’ (Mummy) என்று பெயர். இவர்கள் நீண்டகாலம் ஆட்சி செய்தால் பாரோக்கள் (pharaoh) எனவும் அழைக்கப்பட்டனர். இதில் பண்டைய மன்னர்களான இரண்டாவது செகெனென்ரே தாவோ , இரண்டாம் ராம்சே , மூன்றாம் ராம்சே, நான்காம் ராம்சே, இரண்டாம் அமென்ஹோதெப், உள்ளிட்ட 18 மன்னர்கள் மற்றும் 4 ராணிகள் என 22 பேரின் பதப்படுத்தப்பட்ட உடல்களும் (மம்மிகள்) ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் உள்ள அல்புஸ்டாட் நகரில் உள்ள தேசிய அருங்காட்சியகத்திற்கு தனித்தனி வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. வழிநெடுக பன்டைய எகிப்திய கலாசார உடையணிந்த ஆண்கள், பெண்கள் மம்மிகளை வரவேற்றனர். எகிப்து அதிபர் அப்துல் பதா அல்சிசி ஊர்வலத்தினை பார்வையிட்டு மம்மிகளுக்கு மரியாதை செலுத்தினார். இவை அனைத்தும் அரசு தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது

About Admin

Check Also

கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக 3 பெண்களுக்கு ‘ரேபிஸ்’ மருந்து

                              …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster