Saturday , April 17 2021
Breaking News
Home / அரசியல் / பிரியாணி அண்டாவோடு ஓட்டம் பிடித்த உ.பி.,க்கள்!

பிரியாணி அண்டாவோடு ஓட்டம் பிடித்த உ.பி.,க்கள்!

பிரியாணி அண்டாவோடு ஓட்டம் பிடித்த உ.பி.,க்கள்!

                                  ஓசி’ பிரியாணிக்கு அடிதடியில் இறங்கிய உ.பி.,க்கள் பற்றிய வீடியோ, வலைதளங்களில், நுாறு நாட்களை தாண்டி ஓடிய சாதனை உண்டு. அதன் நீட்சியாக, அண்டாவோடு பிரியாணியை, ‘அபேஸ்’ செய்த சம்பவம், உதயநிதி தொகுதியில் நடந்திருக்கிறது.சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில், உதயநிதி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து போட்டியிடும், பிரதான வேட்பாளர் ஒருவர் விலைக்கு வாங்கப்பட்டு விட்டார். அதனால், அந்த வேட்பாளர், யார் கண்ணிலும் படாமல் பிரசாரம் செய்து வருவதாக தகவல். இதற்கிடையில், தேர்தல் அலுவலகம் திறப்பதற்காக, இடம் தேடிய உ.பி.,க்கள் கண்ணில், திருவல்லிக்கேணி கந்தப்ப தெருவில் உள்ள பழைய கட்டடம் பட்டது.மளிகை கடை இருந்த கட்டடம் அது. புதிதாக வீடு கட்டுவதற்காக, காலி செய்யப்பட்டு இருந்தது. வசதியா போச்சு என கருதிய வட்ட நிர்வாகி, ஓனரிடம் பேசியிருக்கிறார். அவர் தயங்கியிருக்கிறார். அப்புறம், தங்கள், ‘ஸ்டைலில்’ பேசி, பணிய வைத்தனர்.

அந்த அலுவலகத்தை திறந்து, வட்டத்தை உதயநிதி பாராட்டியது, தனி கதை. இதில் வேதனையும், சோதனையும் யாருக்கு என்றால், அதே சாலையில், பிரியாணி கடை நடத்தும் பாய்க்கு தானாம். தேர்தல் அலுவலகத்தில் செயல் வீரர்கள் கூட்டம் நடந்திருக்கிறது. முடிந்ததும், சுடச்சுட பரிமாற பிரியாணி தேவை என, முன்னாள் பகுதி செயலரின் வாரிசு, பரிவாரங்களுடன் பாய் கடைக்கு வந்தார்.சொன்ன எண்ணிக்கையை, ‘பார்சல்’ கட்டியபடி, ‘பில்’ தொகையை சொல்லியிருக்கிறார் கடைக்காரர்.

கொந்தளித்து விட்டதாம், உ.பி.,க்கள் கூட்டம். ‘ஆட்சிக்கு வரப்போகும் எங்களிடமே பணம் கேட்கலாமா? பிரியாணி கடை நடத்த வேண்டாமா?’ என கேட்க, பயப்படாத கடைக்காரரும், ‘ஓசி பிரியாணில்லாம் தர முடியாது’ என்று கூறியிருக்கிறார். பேசிப் பயனில்லை என்ற முடிவுக்கு வந்தவர்கள், கடையில் இருந்த பிரியாணி அண்டாவை, ‘அலேக்காக’ துாக்கி கொண்டு ஆட்டோவில்போய் விட்டனராம்.                                          Dailyhunt

About Admin

Check Also

தீவிரமாகும் கரோனா: புதுச்சேரியில் கல்லூரித் தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

தீவிரமாகும் கரோனா: புதுச்சேரியில் கல்லூரித் தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு கரோனா தொற்றின் வேகம் காரணமாகப் புதுச்சேரி கல்லூரிகளில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster