நடிகர் கமல்ஹாசனை விளாசும் நடிகை கௌதமி – அரசியல் அட்ராசிட்டி..!!
கமல்ஹாசனுடன் நீண்டகாலம் ஒன்றாக வசித்து வந்த நடிகை கௌதமி தற்போது பாஜக கூட்டணிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடலாம் என்று முடிவு செய்து தீவிரமாக களப்பணி ஆற்றி வந்த நிலையில் அந்த தொகுதியில் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போட்டியிடுவதால் கௌதமியின் ஆசை நிராசையாகி விட்டது.
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவதாக முடிவு செய்திருந்த நடிகை குஷ்பூ, அங்கே உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவது தெரியவந்ததால் ஆயிரம் விளக்குக்கு மாறினார். நடிகை கௌதமி அப்படி தொகுதி மாறாமல் போட்டியிடுவதை தவிர்த்துள்ளார். அதிமுக – பாஜக கூட்டணிக்கு பிரச்சாரம் செய்து வரும் கௌதமி செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.

” நடிகர் கமல் ஹாசன் மாற்றம் என்ற மார்க்கெட்டிங் யுத்தியை கையாண்டு மக்கள் நீதி மய்யத்திற்கு பிரச்சாரம் செய்கிறார். இது எல்லா புதிய கட்சிகளும் செய்வது தான். ஆனால் அதெல்லாம் சரியான யுக்திகள் தானா என்பதைத் தேர்தல் முடிவுகள் தெரியப்படுத்தும்” என்று கமல் ஹாசன் பற்றி கருத்து தெரிவித்துள்ளார் கௌதமி.
கமல் ஹாசனுடன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பதிலளிக்க மறுத்த கௌதமி அது எப்போதோ முடிந்து போன கதை என்று நிறுத்திக் கொண்டார்.
Thanks to Dailyhunt