Saturday , April 17 2021
Breaking News
Home / கொரோனா / தமிழகத்தில் கொரோனா அதிகரிக்கிறது- உஷாராக இருக்க சுகாதாரத்துறை அதிகாரி எச்சரிக்கை..!!

தமிழகத்தில் கொரோனா அதிகரிக்கிறது- உஷாராக இருக்க சுகாதாரத்துறை அதிகாரி எச்சரிக்கை..!!

தமிழகத்தில் கொரோனா அதிகரிக்கிறது- உஷாராக இருக்க சுகாதாரத்துறை அதிகாரி எச்சரிக்கை..!!                     

பொதுமக்கள் முடிந்தவரை குடும்ப நிகழ்ச்சிகளை தள்ளி வைக்க வேண்டும். கோவிட் இல்லாத இறப்பு இருந்தால் கூட அங்கு 200-க்கும் மேற்பட்டோர் கூடினால் கொரோனா உடனே பரவும்.

சென்னை:-

தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- கொரோனா பாதிக்கப்பட்டவரும், கொரோனா பாதிக்கப்படாதவரும் முகக்கவசம் அணிந்து கொண்டாலே கொரோனா பரவாது.

முன்களப்பணியாளர்கள் போர்வீரர்களை போல மக்களை காத்து கொண்டு இருக்கிறார்கள். தேர்தல் பிரசார கூட்டம் நடத்துபவர்கள், அதில் பங்கேற்பவர்களை கட்டாயம் முககவசம் அணிந்து வர செய்ய வேண்டும். அந்த பொறுப்பை அரசியல் கூட்டங்களை நடத்துபவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி செய்தால் எங்களுடைய பணி சுமை குறையும்.

தற்போது கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள் ஆகிய இடங்களிலும், மயிலாப்பூரில் கலாசார நிகழ்ச்சிகளிலும் கூட்டம் கூடுகிறது. இப்படி கூட்டம் கூடுவதாலும் ஒருவருக்கு ஒருவர் குடும்ப நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டு இருப்பதாலும் கொரோனா எளிதாக பரவுகிறது. இதன் மூலம் கொரோனா அதிகரித்து வருகிறது. எனவே பிரசாரம், குடும்ப நிகழ்ச்சி, கோவில் விழாக்களில் கண்டிப்பாக முககவசம் அணியவேண்டும்.

கொரோனா உருமாறி இருக்கிறது. ஆனால் அது பரவுவதில் எந்த மாற்றமும் இல்லை. நாம்தான் முககவசம் அணியாமல் மாறி வருகிறோம். இன்று 674 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக மாறி உள்ளன.

3-க்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்தால் அதை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கிறோம். சளி, காய்ச்சல் அறிகுறி இருப்பவர்கள் பரிசோதனை செய்து கொண்டால், உதாரணத்துக்கு 10 ஆக இருக்கும் பாதிப்பு 25 ஆக உயரலாம். அதே நேரத்தில் அவர்கள் பரிசோதனை செய்யாவிட்டால் அவர்கள் மூலம் 150 பேருக்கு கொரோனா பரவிவிடும்.

தமிழகம் முழுவதும் 56 ஆயிரம் படுக்கைகள் கொண்ட ஆஸ்பத்திரிகள் தயாராக உள்ளன. மேலும் 70 ஆயிரம் படுக்கைகளுடன் ஏற்கனவே செயல்பட்ட கொரோனா மையங்களும் உள்ளன. அதையும் இப்போது பயன்படுத்த உத்தரவிட்டுள்ளோம்.

கொரோனாவில் இருந்து பாதுகாக்க உலகத்திட்டம், தேசிய திட்டம், மாநில திட்டம் இருந்தாலும் கூட மாவட்ட திட்டத்தையும் உருவாக்கி உள்ளோம். தஞ்சாவூரை பொறுத்தவரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூலமாக கொரோனா பரவியது. சென்னை மற்றும் கோவையில் பணியிடங்கள் மற்றும் வேறு நிகழ்ச்சிகள் காரணமாக கொரோனா பரவியது. சென்னையில் தெருக்களில் கொரோனா பரவுகிறதா என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க கூறி உள்ளோம்.

கிராமப்புறங்களில் 1 லட்சத்து 88 ஆயிரத்து 631 குடியிருப்புகளில் 3 ஆயிரத்து 88 குடியிருப்பில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள்.

இதில் 146 குடியிருப்புகளில் 3-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் உள்ளன. 2942 குடியிருப்புகளில் 3-க்கும் குறைவான பாதிப்புகள் உள்ளன. 1 லட்சத்து 22 ஆயிரத்து 242 நகர்ப்புற தெருக்களை பொறுத்தவரை 4,961 தெருக்களில் கொரோனா பாதிப்பு உள்ளது கொரோனா பாதிப்பு குறைவாக இருக்கும் தெருக்களில் மக்கள் அஜாக்கிரதையாக இருந்தால் பாதிப்பு மேலும் அதிகரிக்கும். கிராமப்புறத்தில் 146-ம், நகர்ப்புறத்தில் 528-ம் கொரோனா பாதிப்புகள் உள்ளன.

பொதுமக்களை பொறுத்தவரை முடிந்தவரை குடும்ப நிகழ்ச்சிகளை தள்ளி வைக்க வேண்டும். கோவிட் இல்லாத இறப்பு இருந்தால் கூட அங்கு 200-க்கும் மேற்பட்டோர் கூடினால் கொரோனா உடனே பரவும்.

எனவே அங்கும் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். தற்போது தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைந்துள்ளது. ஆனால், பாதிப்பு அதிகமாக இருப்பதால் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

இறப்பு எண்ணிக்கையை குறைப்பதற்காக இன்று டீன்கள் மற்றும் அனைத்து மருத்துவமனை பிரதிநிதிகளை அழைத்து பேச இருக்கிறோம். இதில் அனைத்து டீன்களும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source : Rathiri Rounds News

About Admin

Check Also

தீவிரமாகும் கரோனா: புதுச்சேரியில் கல்லூரித் தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

தீவிரமாகும் கரோனா: புதுச்சேரியில் கல்லூரித் தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு கரோனா தொற்றின் வேகம் காரணமாகப் புதுச்சேரி கல்லூரிகளில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster