Saturday , April 17 2021
Breaking News
Home / அரசியல் / ‘தன்னுடன் பிறந்த அண்ணனையே ஏற்காதவர் ஸ்டாலின்’

‘தன்னுடன் பிறந்த அண்ணனையே ஏற்காதவர் ஸ்டாலின்’

 

‘தன்னுடன் பிறந்த அண்ணனையே ஏற்காதவர் ஸ்டாலின்

                                         திருச்சி : ”தன்னுடன் பிறந்த அண்ணனையே, தனக்கு போட்டியாக வந்து விடுவார், என்று கட்சியை விட்டே நீக்கியவர் ஸ்டாலின்,” என்று திருச்சியில், தேர்தல் பிரச்சாரம் செய்த இ.பி.எஸ்., பேசினார்.திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, நேற்று, முதல்வர் இ.பி.எஸ்., மரக்கடை எம்.ஜி.ஆர்., சிலை அருகே பேசினார். அவர் பேசியதாவது: எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா காலத்தில், அ.தி.மு.க., கோட்டையாக விளங்கியது திருச்சி. மீண்டும், அதை நிருபித்துக் காட்டவேண்டும்.அ.தி.மு.க., எதுவுமே செய்யவில்லை, என்று ஸ்டாலின் பொய்யான பிரச்சாரம் செய்து வருகிறார். தி.மு.க.,வும் காங்கிரஸும் தான் நீட் தேர்வை கொண்டு வந்தது. நீட் தேர்வு தமிழகத்துக்கு வரக்கூடாது, என்று அ.தி.மு.க., அரசு தொடர்ந்து முயற்சி செய்தது. தமிழகத்தில், புதிதாக துவங்கப்படும் 11 மருத்துவக் கல்லுாரிகளில், 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு அடிப்படையில், அடுத்த ஆண்டில் இருந்து, அரசு பள்ளி மாணவர்கள் 600 பேருக்கு, மருத்துவ படிப்புக்கு சீட் கிடைக்கும்.டெல்டா மாவட்டங்களுக்கு, ஒவ்வொரு முறையும் தேவையான தண்ணீரை போராடி பெற வேண்டி உள்ளது. பிரதமர் என்ற அடிப்படையிலும், சட்ட ரீதியாகவும் தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை பெற்றுத் தர வேண்டும், என்று வலியுறுத்தி உள்ளேன். கோதாவரி- காவிரி இணைப்பு திட்டம் பற்றி, ஸ்டாலின் ஒருமுறையாவது பேசியிருப்பாரா?

தி.மு.க., இதற்காக, எந்த முயற்சியாவது எடுத்ததா?மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தவே, மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுகிறோம். தி.மு.க.,வை போல், அதிகாரத்துக்காக, அ.தி.மு.க., இல்லை. ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்து போட்ட ஸ்டாலின் தான், அதை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறார். வருணபகவான், எனக்கு சாதகமாக இருப்பதால், நல்ல மழை பெய்து, ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன.

தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகி விடும்.அ.தி.மு.க., ஆட்சியில், 32.41 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்து, தமிழகம் சாதனை படைத்துள்ளது. பாரம்பரியம் என்றால் விவசாயிகள் தான். அங்கு, பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் அமைக்கப்படும். கல்லணை பலப்படுத்தப்பட்டு, கல்லணை கால்வாயும் துார் வாரப்படும்.முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து, ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் சட்டசபைக்கு சென்ற முதல்வர் நான் தான்.

இது உங்களுடைய அரசு. நீங்கள் உத்தரவு போடுங்கள். அதை செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். மக்கள் தான் நீதிபதி.ஊழலுக்காக, கலைக்கப்பட்ட அரசு, தி.மு.க., தான்.

கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் செய்யும் ஒரே கட்சி தி.மு.க., சாலை போடுவதில் ஊழல் என்று, 2 ஆண்டுகளுக்கு முன் ரத்து செய்யப்பட்ட டெண்டரை, கவர்னரிடம் கொடுத்த ஊழல் பட்டியலில், என் பெயரை சேர்த்துள்ளனர். முதல்வர் மீது புகார் கொடுக்கும் போது, விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டாமா?மக்களிடம் அவப்பெயரை ஏற்படுத்துவதற்காக, ஊழல் பட்டியல் கொடுத்துள்ளனர். எங்களிடம் மடியில் கணமில்லை. வழியில் பயமில்லை.

தன்னுடைய மகனை கொண்டு வருவதற்காகவே திட்டமிடுகிறார். மக்களுக்காக பரிந்து பேசியதாக சரித்திரம் இல்லை. கிராமங்களில் வித்தைக்காரர் காட்டும் கீரி- பாம்பு சண்டை போல, ஸ்டாலின் மனு வாங்குகிறேன், என்று சொல்லி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்.ஸ்டாலினால், தன்னுடன் பிறந்த அண்ணனையே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தனக்கு போட்டியாக வந்து விடுவார் என்று கட்சியை விட்டே நீக்கியவர் ஸ்டாலின். அவர், எப்படி, நாட்டு மக்களுக்கு எப்படி நன்மை செய்வார்.இவ்வாறு, அவர் பேசினார்.

Dailyhunt

About Admin

Check Also

தீவிரமாகும் கரோனா: புதுச்சேரியில் கல்லூரித் தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

தீவிரமாகும் கரோனா: புதுச்சேரியில் கல்லூரித் தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு கரோனா தொற்றின் வேகம் காரணமாகப் புதுச்சேரி கல்லூரிகளில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster