Breaking News
Home / அரசியல் / தி.மு.க., உள்குத்துக்கு முடிவு கட்ட சேலத்தில் சபரீசன் பஞ்சாயத்து

தி.மு.க., உள்குத்துக்கு முடிவு கட்ட சேலத்தில் சபரீசன் பஞ்சாயத்து

தி.மு.க., உள்குத்துக்கு முடிவு கட்ட சேலத்தில் சபரீசன்

பஞ்சாயத்து

இ.பி.எஸ்.,சின் மாவட்டமான சேலத்தில், அ.தி.மு.க.,வின் கை ஓங்கி இருப்பதாக அறிவாலயத்துக்கு தகவல் போயிருக்கிறது. சாதகமான அந்த நிலை, ராசாவின் பேச்சால், அலையாக மாறும் ஆபத்து உள்ளது என்று அந்த தகவல் எச்சரிக்கை மணி அடித்துள்ளது.இதையடுத்து, ஸ்டாலின் மருமகன் சபரீசன் சேலத்துக்கு பறந்து வந்தார். ஓட்டலில் தங்கி இரவு முழுவதும் கட்சி நிர்வாகிகளை போனில் பிடித்து, ஒவ்வொரு தொகுதியிலும் என்ன நடக்கிறது என்பதை கேட்டறிந்தார். தொகுதிக்கு, மூன்று பேர் வீதம், காலையில் வந்து தன்னை சந்திக்க சொன்னார். அப்படி வந்த மத்திய மாவட்ட செயலர் ராஜேந்திரன், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சிவலிங்கம், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் செல்வகணபதி ஆகியோருடன் முதலில் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து சேலம் எம்.பி., பார்த்திபன், முன்னாள் எம்.எல்.ஏ., தமிழரசு, தேர்தல் பணிக்குழு செயலர் ராஜா,பனமரத்துப்பட்டி ஒன்றிய பொறுப்பாளர் சுரேஷ்குமார் உள்பட, 32 பேர் சபரீசனை சந்தித்தனர். அதை தொடர்ந்து, 10 தொகுதி, தி.மு.க., வேட்பாளர்களையும் தனித்தனியே சந்தித்தார். ‘மக்களிடம் வரவேற்பு எப்படி, கூட்டணி கட்சியினரின் ஒத்துழைப்பு எப்படி’ என, தலா, 5 நிமிடம் விசாரித்து, சில ஆலோசனைகளை கூறியுள்ளார்.பல தொகுதிகளில் கட்சியினர் உள்ளடி வேலைகளில் ஈடுபடுவதாக வேட்பாளர்கள் சொன்ன புகார்களால் சபரீசன் கடுப்பானார். குறிப்பிட்ட சில நிர்வாகிகளை அழைத்து, ‘உள்குத்து வேலைகளை இந்த நிமிடமே நிறுத்துங்கள்.

உங்கள் தொகுதியில் கட்சி தோற்றால், சென்னை இருக்கும் திசைக்கே வராதீர்கள்’ என, எச்சரித்தார். ஆ.ராசா பேச்சால் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கொதிப்பால், தி.மு.க.,வுக்கு நேரக்கூடிய பாதிப்பை எவ்வாறு குறைப்பது என வேட்பாளர்கள் கேட்டதற்கு சபரீசன் சில யோசனைகளை தெரிவித்துள்ளார். கருத்து கணிப்பை பார்த்துவிட்டு, தமிழகம் முழுதும் அலை வீசுவதாகவும், வெற்றி உறுதி என்றும் நம்பி மேலிடம் பணம் தர மறுப்பதாகவும் வேட்பாளர்கள் முறையிட்டுள்ளனர். அது உடனே சரி செய்யப்படும் என சபரீசன் உறுதி அளித்தார் என ஆலோசனையில் பங்கேற்ற ஒரு சீனியர் நிர்வாகி சொன்னார்.அதையடுத்து, காலை, 11:15 மணிக்கு, சபரீசன் நாமக்கல் புறப்பட்டார். அங்கும், மாவட்ட, தி.மு.க., நிர்வாகிகளை சந்தித்து உள்ளடி வேலையில் ஈடுபடுவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். ஏப்., 4 வரை, ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர், ஊட்டி என, கொங்கு மண்டலத்திலேயே, சபரீசன் வலம் வர உள்ளதாக, அவருடன் வந்தவர்கள் நமது நிருபரிடம் தெரிவித்தனர்.ராசாவின் பேச்சால் சேலம் வட்டார பெண்கள் கொதித்து எழுந்ததை கண்டு ஸ்டாலின் அங்கு அவசரமாக சென்று, முதல்வரின் இடைப்பாடி தொகுதியில் மக்களை சந்தித்தார். மறுநாள், அவரது மருமகன் சபரீசன், சேலத்தில் முகாமிட்டார். நேற்று காலை, மகன் உதயநிதி, சங்ககிரி, இடைப்பாடி தொகுதிகளில் பிரசாரம் செய்தார். குடும்பமே சேலம் மாவட்டத்தை குறிவைத்து, மூன்று நாளாக பிரசாரம் செய்வதால், ராசாவால் நேர்ந்த சேதாரம் சரியாகி விடும் என உ.பி.,க்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.            thanks to dailyhunt

About Admin

Check Also

தீவிரமாகும் கரோனா: புதுச்சேரியில் கல்லூரித் தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

தீவிரமாகும் கரோனா: புதுச்சேரியில் கல்லூரித் தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு கரோனா தொற்றின் வேகம் காரணமாகப் புதுச்சேரி கல்லூரிகளில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster