Breaking News
Home / அரசியல் / பெண் வேட்பாளரின் காலைத் தொட்டு வணங்கிய பிரதமர் மோடி..!!

பெண் வேட்பாளரின் காலைத் தொட்டு வணங்கிய பிரதமர் மோடி..!!

கேரளாவில் பெண் வேட்பாளரின் காலைத் தொட்டு வணங்கிய பிரதமர் நரேந்திர மோடி..!!

சட்டசபை தேர்தலுக்காக தமிழகம் எந்த அளவு தீவிரமாக தயாராகிக் கொண்டிருக்கிறதோ அதே அளவுக்கு கேரளாவிலும் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. கேரளாவிலும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதனையொட்டி இன்று பாலக்காட்டில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார். பாலக்காட்டில் பாஜக சார்பாக மெட்ரோ மேன் ஸ்ரீதரன் களமிறக்கப்பட்டுள்ளார். பாஜக வேட்பாளர்களுக்கு வாக்குசேகரிப்பதற்காக பிரதமர் மோடி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது மன்னார்காடு தொகுதி பாஜக வேட்பாளரான நசீமா பிரச்சாரத்திற்கு வந்த பிரதமர் மோடியின் காலில், விழுந்து வணங்க முயன்றபோது அதை தடுத்த பிரதமர் அவர் காலை தொட்டு வணங்கினார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமர் பெண்களுக்கு கொடுக்கும் மரியாதையை பாருங்கள் என பாஜகவினர் பிரச்சாரம் மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்.

அதுமட்டுமின்றி ஒவ்வொரு இந்தியனுக்கும் மோடி ரோல் மாடலாக திகழ்கிறார் என்று பெருமை பொங்கச் சொல்கிறார்கள் கேரள பாஜகவினர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நசீமா, “பிரதமர் மோடி எவ்வளவு பெரிய மனிதர். அவரின் இந்த செயலை நான் எதிர்பார்க்கவில்லை. இதனை நினைக்கும்போதே கனவு போல உள்ளது. அவர் பெண்களை எவ்வளவு மரியாதையுடன் நடத்துகிறார் என்பதை இது காட்டுகிறது ” எனக்கூறினார்.

Thanks to Dailyhunt

About Admin

Check Also

தீவிரமாகும் கரோனா: புதுச்சேரியில் கல்லூரித் தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

தீவிரமாகும் கரோனா: புதுச்சேரியில் கல்லூரித் தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு கரோனா தொற்றின் வேகம் காரணமாகப் புதுச்சேரி கல்லூரிகளில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster