Saturday , April 17 2021
Breaking News
Home / அரசியல் / காங்கிரஸ்-திமுகவிற்கு வாரிசு அரசியலே நோக்கம்.. பாஜகவிற்கு நாட்டின் வளர்ச்சியே நோக்கம்.. பிரதமர் மோடி..!!

காங்கிரஸ்-திமுகவிற்கு வாரிசு அரசியலே நோக்கம்.. பாஜகவிற்கு நாட்டின் வளர்ச்சியே நோக்கம்.. பிரதமர் மோடி..!!

காங்கிரஸ்-திமுகவிற்கு வாரிசு அரசியலே நோக்கம் என்றும், பாஜகவிற்கு நாட்டின் வளர்ச்சியே நோக்கம் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.

வெற்றி வேல், வீர வேல் என தமிழில் முழக்கமிட்டு பிரதமர் மோடி தனது பிரசார உரையைத் தொடங்கினார்.

இதில் அவர் பேசியதாவது, ”தமிழகத்தின் மிகப் பழமையான நகரத்திற்கு வருவது மகிழ்ச்சியளிக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையிலும் தமிழில் சில உதாரணங்களைக் கூறியதை நினைவுகூர்கிறேன். தமிழகத்தின் கலாசாரத்தால் ஒட்டுமொத்த தமிழகமும் பெருமைக்கொள்கிறது.

தாய்மொழியில் உயர்கல்வி:

ஜெயலலிதா, எம்.ஜி.ஆரின் லட்சியம் நான். சமுதாயத்திலுள்ள விவசாயிகள், ஏழைகள், இளைஞர்கள், பெண்கள் நலனுக்கான பாடுபடுவேன்.

தேவேந்திர குல வேளாளர் கோரிக்கையை நிறைவேற்றியது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுதான். தாய்மொழியில் மருத்துவக் கல்வி, தொழிற்கல்வியை வழங்க மத்திய அரசு விரும்புகிறது.

பெண்களை இழிவுபடுத்தியதற்கு கண்டனம்:

காங்கிரஸ் – திமுகவைப் பொருத்தவரை வாரிசு அரசியல் தான் நோக்கமாக உள்ளது. திமுக, காங்கிரஸ் தலைமைகள் தங்களது நிர்வாகிகளை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும்.

தமிழக முதல்வரின் தாயாரை திமுக பிரமுகர் அவமதித்துள்ளார். பெண்களை அவமதித்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் அக்கட்சி எடுக்கவில்லை. ஒருவேளை மறுபடியும் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்திலுள்ள பெண்கள் அனைவரும் அவமதிக்கப்படுவார்கள். பெண்களை வளர்ச்சிப் பாதையில் இட்டுச்செல்ல அவர்களால் முடியாது.

வாரிசுக்காக தலைவர்கள் புறக்கணிப்பு:

திமுகவின் வாரிசுக்காக அக்கட்சியில் பல தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். பெண்களின் கண்ணியத்தைக் காக்க கிராமப் புறங்களில் பாஜக அரசால் பல கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.

சிறு, குறு தொழில் முனைவோர்க்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. உலகம் முழுவதுக்கும் பொம்மை ஏற்றுமதி மையமாக தமிழகத்தை மாற்ற வேண்டும்” என்று கூறினார்.

Thanks to Dailyhunt

About Admin

Check Also

தீவிரமாகும் கரோனா: புதுச்சேரியில் கல்லூரித் தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

தீவிரமாகும் கரோனா: புதுச்சேரியில் கல்லூரித் தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு கரோனா தொற்றின் வேகம் காரணமாகப் புதுச்சேரி கல்லூரிகளில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster