Saturday , April 17 2021
Breaking News
Home / அரசியல் / 10 தொகுதிகளை குறிவைத்து சசிகலா ‘ஆன்மிக’ பயணம்!

10 தொகுதிகளை குறிவைத்து சசிகலா ‘ஆன்மிக’ பயணம்!

10 தொகுதிகளை குறிவைத்து சசிகலா ‘ஆன்மிக’ பயணம்!

கோவில்பட்டி, பாபநாசம், பாப்பிரெட்டிப்பட்டி, திருப்பரங்குன்றம், முதுகுளத்துார், குன்னுார், காரைக்குடி, பொள்ளாச்சி, உசிலம்பட்டி, திருவாடானை. இந்த, 10 தொகுதிகள், அ.ம.மு.க.,வுக்குசாதகமாக இருப்பதாக, சசிகலாவுக்கு சொல்லப்பட்டுள்ளது.இங்கெல்லாம் வெற்றி பெற முடியாவிட்டாலும், அதிக ஓட்டுகள் பெற்று, இரண்டாவது இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக, தினகரன் நம்புகிறார். இதனால், அந்தத் தொகுதிகளை குறி வைத்து, சசிகலா ஆன்மிக பயணம் செல்கிறார். பத்தில் ஒன்று தினகரன் போட்டியிடும் கோவில்பட்டி. மீதி, ஒன்பது தொகுதி வேட்பாளர்களையும் சந்தித்து, சசிகலா பண உதவி செய்திருக்கிறார். ‘குறைந்தது, 10 சதவீதம் ஓட்டு வாங்கினால், அ.தி.மு.க.,வை கைப்பற்றி விடலாம். எனவே, அதை நோக்கி உழைப்பை செலுத்துங்கள்’ என, சசி சொன்னதாக, ஒரு வேட்பாளர் தெரிவித்தார்.அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிக்கை விட்ட, சசிகலாவின் ஆன்மிக பயணம், அ.ம.மு.க.,வினருக்கு உற்சாகம் அளிப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

Dailyhunt

About Admin

Check Also

தீவிரமாகும் கரோனா: புதுச்சேரியில் கல்லூரித் தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

தீவிரமாகும் கரோனா: புதுச்சேரியில் கல்லூரித் தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு கரோனா தொற்றின் வேகம் காரணமாகப் புதுச்சேரி கல்லூரிகளில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster