Saturday , April 17 2021
Breaking News
Home / அரசியல் / பா.ஜ.,வுடன் தினகரன் ரகசிய ‘டீலா?’

பா.ஜ.,வுடன் தினகரன் ரகசிய ‘டீலா?’

பா.ஜ.,வுடன் தினகரன் ரகசிய ‘டீலா?’

தன்னை கடு    மையாக விமர்சித்த, அ.தி.மு.க., அமைச்சர்களை பழி தீர்க்க, தினகரன் வியூகங்கள் வகுத்து செயல்படுகிறார். அவரது, ‘லிஸ்டில் டாப்பில்’ இருப்பவர் கடம்பூர் ராஜு. எனவே தான், கோவில்பட்டியில் அவருக்கு எதிராக, தினகரனே களத்தில் குதித்து விட்டார். இன்னொருவர் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா. அம்பாசமுத்திரத்தில் அவரை வீழ்த்த, பலமான வேட்பாளரை நிறுத்தியுள்ளார்.இப்படி, பார்த்துப் பார்த்து வேட்பாளரை நிறுத்திய தினகரன், திருநெல்வேலியில் மட்டும் வேறு, ‘ரூட்டில்’ போவதாக தெரிகிறது. இங்கே, அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள, பா.ஜ., வேட்பாளராக நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். தேவர் சமூகத்தை சேர்ந்த இவர் விஷயத்தில், தினகரன் மென்மையான போக்கை கையாள்வதாக, அவரது கட்சியினரே சொல்கின்றனர். கடந்த முறை, 601 ஓட்டுக்களில் நயினார் நாகேந்திரன் தோல்வி அடைந்தார். அதற்கு காரணம், அவரது ஜாதிக்காரரான மாடசாமி. இவர், தே.மு.தி.க., வேட்பாளராக போட்டியிட்டு, 8,640 ஓட்டு வாங்கினார்.இந்த தடவை எப்படியும் ஜெயித்து விடுவது என கேப்டனிடம், ‘சீட்’ கேட்டு ஆவலுடன் காத்திருந்தார். ஆனால், கூட்டணி கட்சியான, தே.மு.தி.க.,வுக்கு அந்த தொகுதியை கொடுக்காமல், அ.ம.மு.க.,வுக்காக எடுத்துக் கொண்டார் தினகரன். சரி, நயினாருக்கு எதிராக, அ.ம.மு.க., வேட்பாளரை நிறுத்தி ஆட்டம் காட்டப் போகிறார் என, பலரும் எதிர்பார்த்தனர். அதே மாதிரி, தினகரனும், தன் கட்சியின் அமைப்பு செயலர் பால்கண்ணனை வேட்பாளராக அறிவித்தார். மாடசாமி களம் இறங்க முடியாமல் போனாலும், இது, சரியான போட்டி தான் என, மக்கள் நிமிர்ந்து உட்கார்ந்தனர். அப்போது தான், கதையில் அடுத்த திருப்பம் வந்தது.பால்கண்ணன் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.ஒரு மனுவில் தவறு, பிழை இருந்தால், இன்னொரு மனு சரியாக இருக்கும் என, அனுபவசாலிகளே நாலைந்து வேட்பு மனு போடும் சூழலில், பால்கண்ணன் பலர் சொல்லியும் கேட்காமல், ஒரே ஒரு மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு தள்ளுபடியானதும், மனிதர் பயங்கர சோகமாகி புலம்புவார் என எதிர்பார்த்த நிலையில், ‘அப்படியா… சரி பரவாயில்லை. விடுங்க!’ என்று சொல்லி, படு சகஜமாக கிளம்பிச் சென்றார். ஆஹா…

என்று, அ.ம.மு.க., தொண்டர்கள் வடிவேலு பாணியில், ‘கோரஸ்’ பாடினர். தினகரன் வியூகத்தின் ஒரு பகுதி தான், பால்கண்ணனின் மனு தள்ளுபடி என்று அவர்களுக்கு புரிந்தது. கதை இன்னும் முடியவில்லை.கமல் கூட்டணியில் தொகுதியை கேட்டு வாங்கிய சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் மனுவும், இதே போல தள்ளுபடியானது அடுத்த திருப்பம். டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் சிவகுமார் வேட்புமனுவில், அவரது கட்சியின் அங்கீகார கடிதம் இணைக்கப்படவில்லை.

ஆகவே, அவர் ஒரு சுயேச்சையாக களம் காண்கிறார். இவ்வாறு, பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சாதகமாக, பல கட்சிகளும் தன்னைத் தானே பலவீனப்படுத்திக் கொள்ளும் வினோத காட்சிகள் திருநெல்வேலியில் அரங்கேறின. அவர்களில், முன்னணியில் நிற்பது தினகரனின், அ.ம.மு.க.,நயினார் வெற்றிக்கு தினகரன் மறைமுகமாக உதவுகிறார் என்பது, ஒவ்வொரு அல்வாக்கடை அருகிலும் பேசுபொருள் ஆகிவிட்டது. தினகரன், ‘டீல்’ நயினாருடனா அல்லது அவரை நிறுத்தியுள்ள, பா.ஜ.,வுடனா என்பது தான் சிதம்பர ரகசியமாக இருக்கிறது. எம்.எல்.ஏ., லட்சுமணனை மீண்டும் நிறுத்தியிருக்கிறது, தி.மு.க., இவர் முன்னாள் மேயர் ஏ.எல்.சுப்ரமணியனின் வாரிசு. ஆக, திருநெல்வேலியில், பா.ஜ., – தி.மு.க., இடையேதான் நேரடி போட்டி. ஒரு வாரம் இருப்பதால், இன்னும், ‘சீன்’ மாறலாம் என, தொகுதிவாசிகள் எதிர்பார்க்கிறார்களாம்.

Dailyhunt thanks

About Admin

Check Also

தீவிரமாகும் கரோனா: புதுச்சேரியில் கல்லூரித் தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

தீவிரமாகும் கரோனா: புதுச்சேரியில் கல்லூரித் தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு கரோனா தொற்றின் வேகம் காரணமாகப் புதுச்சேரி கல்லூரிகளில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster