Breaking News
Home / அரசியல் / அதிமுகவின் வெற்றிக்காக சசிகலா செய்த வேலை.. அதிர்ச்சியில் டிடிவி தினகரன்.!!

அதிமுகவின் வெற்றிக்காக சசிகலா செய்த வேலை.. அதிர்ச்சியில் டிடிவி தினகரன்.!!

அதிமுகவின் வெற்றிக்காக சசிகலா செய்த வேலை.. அதிர்ச்சியில் டிடிவி தினகரன்.!!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா கடந்த ஜனவரி 27ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து, பிப்ரவரி 8ஆம் தேதி தமிழகம் திரும்பினார். தமிழகம் திரும்பியதும் அதிமுகவை மீட்டு எடுப்பார் என கூறப்பட்ட நிலையில், சசிகலா தான் அரசியல் விட்டு விலகுவதாக அறிக்கை வெளியிட்டு, அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

தற்போது ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார். சசிகலா மன உளைச்சலில் இருப்பதாலேயே ஆன்மிகம் பயணம் மேற்கொள்வதாக கூறப்படுகிறது. அண்மையில் தனது கணவரின் சொந்த ஊருக்கு சென்ற குலதெய்வ கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

இந்நிலையில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் தரிசனம் செய்வதற்காக நேற்று ராமநாதபுரம் சென்றார். அங்கு அமமுக நிர்வாகிகள் சசிகலாவுக்கு குருத்தோலை வழங்கி வரவேற்றனர். இதையடுத்து, சற்று நேரம் விடுதியில் ஓய்வெடுத்து, இரவு 7 மணிக்கு திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

இரவு 8 மணியளவில் மீண்டும் ராமேஸ்வரத்திற்கு புறப்பட்டு சென்றார். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் இன்று அதிகாலை நடைபெற்ற ஸ்படிக லிங்க பூஜையில் தரிசனம் செய்தார். சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சசிகலா கோவில் கோவிலாக சென்று சாமி தரிசனம் செய்வது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயலலிதாவுடன் இருந்தபோது அதிமுக வெற்றிக்காக கோவில் கோவிலாக சென்று வழிபட்டவர் சசிகலா. அரசியலை விட்டு ஒதுங்கி விட்டதாக கூறினாலும், சசிகலாவை அதிமுகவில் இணைய வேண்டும் என்ற எண்ணம் இருந்துக் கொண்டுதான் உள்ளது. அதனால் தான், சசிகலா அதிமுக வெற்றி பெற வேண்டும் வழிபடு இடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் டிடிவி தினகரன் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.

Thanks to Dailyhunt

About Admin

Check Also

தீவிரமாகும் கரோனா: புதுச்சேரியில் கல்லூரித் தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

தீவிரமாகும் கரோனா: புதுச்சேரியில் கல்லூரித் தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு கரோனா தொற்றின் வேகம் காரணமாகப் புதுச்சேரி கல்லூரிகளில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster