தி.மு.க., சின்னம் உள்ள முகக்கவசம் அணிந்து தபால் ஓட்டு சேகரித்த அதிகாரிகளை, அ.தி.மு.க., வினர் சிறை பிடித்தனர்..!!
வேலூர் மாவட்டம், சேண்பாக்கத்தில் நேற்று மாற்றுத்திறனாளிகள், ஐந்து பேரிடம் தபால் ஓட்டு சேகரிக்க தேர்தல் அதிகாரிகள் ஆறு பேர் சென்றனர். அவர்கள், தி.மு.க., சின்னம் உள்ள முகக்கவசத்தை அணிந்து சென்றனர்.
தகவல் அறிந்த வேலூர் மாநகர் மாவட்ட, அ.தி.மு.க., துணை செயலாளர் ஜெயப்பிரகாசம் தலைமையில் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் அணிந்திருந்த முகக்கவசங்களை கழட்டி எரியப்பட்டு வேறு அணிந்து கொண்டு, மன்னிப்பு கேட்டதால் பிரச்னை முடிவுக்கு வந்தது.
Thanks to Dailyhunt